'ராவூலுடனான சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் மிக்கது' - ஒபாமா

கியூபத் தலைவர் ராவூல் காஸ்ட்ரோவுடனான தனது சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் மிக்க ஒன்று விபரித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இது கியூபாவுடன் மாத்திரமன்றி அனைத்து லத்தீன் அமெரிக்காவுடனான அமெரிக்க உறவில் ஒரு பெரும் திருப்பம் என்று கூறியுள்ளார்.

கியூபா - அமெரிக்கா தலைவர்கள் சந்திப்பு

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கியூபா - அமெரிக்கா தலைவர்கள் சந்திப்பு

கியூபாவில் ஆட்சி மாற்றத்தில் அமெரிக்கா ஆர்வம் காட்டாது என்றும், ஆனால், அங்கு தொடர்ந்தும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக தாம் அழுத்தம் கொடுப்போம் என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அனைத்தையும் விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக அதிபர் ராவூல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.

அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலப்பகுதியில் அமெரிக்காவின் அதிபருக்கும், கியூபாவின் அதிபருக்கும் இடையில் நடக்கும் முதல் தடவையாக நடக்கும் இந்தச் சந்திப்பை பனாமா மாநாட்டில் கலந்து கொண்ட ஏனைய நாடுகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

பனிப்போர் காலத்தின் கடைசி அடையாளமான இரு நாடுகளுக்கு இடையிலான முறுகலை முடிவுக்கு கொண்டுவரும் இந்த முயற்சி துணிச்சல் மிக்க ஒரு நடவடிக்கை என்று பிரேசில் நாட்டு அதிபர் டில்மா ரோஸெஃப் பாராட்டியுள்ளார்.