'பாலுறவுக்காக தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு கஞ்சா கொடுத்த காவலர்கள்'
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரச் சென்று நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பாலுறவுக்கு இணங்கவைப்பதற்காக தடுப்பு முகாம் காவலர்கள் அவர்களுக்கு கஞ்சா கிடைக்க உதவினார்கள் என ஆஸ்திரேலிய அரசு நடத்தியுள்ள புலனாய்வு கண்டறிந்துள்ளது.

பட மூலாதாரம், Getty
பாலியல் வல்லுறவு, பாலியல் சுரண்டல்கள், அடித்து துன்புறுத்தப்படுதல் போன்றவற்றை அனுபவித்துள்ளதாக அந்த பசிஃபிக் தீவில் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள் என்பதை இந்த புலனாய்வு அறிக்கை ஒப்புக்கொள்கிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளில் சில தற்போது விசாரிக்கப்பட்டுவருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயலுபவர்கள் நவுருவிலும் பப்புவா நியு கினீயிலும் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு அவர்களது தஞ்சக் கோரிக்கை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டுவருகிறது.
நாட்டுக்கு வெளியில் ஆட்களை தடுத்துவைக்கின்ற முறை முடிவுக்கு வர வேண்டும் என மனித உரிமை குழுக்கள் வலியுறுத்துகின்றன.








