வங்கதேசத்தில் போராட்டங்களை நிறுத்துமாறு வர்த்தக சமூகம் ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம், bbc
வங்கதேசத்தில் அரசாங்கத்துக்கு எதிரான வேலைநிறுத்தம் மற்றும் போக்குவரத்தை முடக்கும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரி தலைநகர் டாக்காவில் வர்த்தக சமூகத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்துவரும் வன்முறைகள் மற்றும் குழப்பங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 10 பில்லியன் டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகத் தலைவர்கள் கூறுகின்றனர்.
முன்னைய தேர்தலில் மோசடிகள் நடந்ததாகக் கூறுகின்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவி காலிதா ஸியா புதிதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோருகின்றார்.
நேற்றுச் சனிக்கிழமை அரசியல் வன்முறைகளுடன் தொடர்புடைய இரண்டு குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் 9 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








