வங்கதேசம்: ஒருமாத அரசியல் வன்முறைகளில் 60 பேர் பலி

பணிப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 3-வது நாளில் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் 7 பேர் பலியாகினர்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, பணிப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 3-வது நாளில் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் 7 பேர் பலியாகினர்

வங்கதேசத்தில் பெற்றோல் குண்டுத் தாக்குலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு கடந்த மாதத்தில் அரசியல் வன்முறைகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கு நகரமான போக்ராவில் ட்ரக் வாகனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் அதில் பயணித்த வர்த்தகர் ஒருவரும் ஓட்டுநரும் பலியாகியுள்ளனர்.

தலைநகர் டாக்காவுக்கு வெளியே ரயில் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. எனினும் அதில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி போக்குவரத்தை முடக்கும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே இந்த வன்முறைகள் நடந்துள்ளன.

இன்னொரு பெற்றோல் குண்டுத் தாக்குதலை தூண்டியதாக, அக்கட்சியின் தலைவியான காலிதா ஸியா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் காலிதா ஸியாவும் அவரது கட்சியும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.