எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியும் - பில் கேட்ஸ்

எய்ட்ஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டாலோ அல்லது அந்த நோயை எதிர்க்கும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலோ அடுத்த 15 ஆண்டுகளுக்குள் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையை 95 சதவீதம் குறைத்துவிடலாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

பில் கேட்ஸ்

பட மூலாதாரம், bill gates

படக்குறிப்பு, பில் கேட்ஸ்

எச்ஐவி வைரஸ் கிருமிக்கு எதிரான ஒரு மருந்து 2030க்குள் கண்டறியப்படும் என்று தாம் நம்புவதாக டாவோஸில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பேசுகையில் பில் கேட்ஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

எய்ட்ஸ் நோய்க்கு மருந்துகள் கண்டறிவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பல மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

எச்ஐவி தொற்று குறித்த விழிப்புணர்வு அதிகமாகியுள்ளதன் காரணமாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

அவ்வாறே இந்த நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்களும் முன்பை விட அதிகநாள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.