'12 வயதுக்கு முன்னமே ஆபாச படம் பார்த்துள்ளனர்'

பிபிசியிடம் பேசிய இளைஞர்களில் நாலில் ஒருவர் 12 வயதை எட்ட முன்னமே ஆபாச படம் பார்த்துள்ளனர்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு, பிபிசியிடம் பேசிய இளைஞர்களில் நாலில் ஒருவர் 12 வயதை எட்ட முன்னமே ஆபாச படம் பார்த்துள்ளனர்

பிரிட்டனில் பிபிசியின் ஆய்வொன்றில் கலந்துகொண்ட இளைஞர்களில் நால்வரில் ஒருவர், தாம் 12 வயதை எட்ட முன்னரே இணையதளத்தில் பாலியல்- ஆபாச படங்களைப் பார்த்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

பிரிட்டனில் உள்ள 16 வயது முதல் 21 வயது வரையான 1000 இளைஞர்களிடத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

'ஆபாசப் படங்கள்: அவற்றின் பாதிப்பு என்ன?' என்ற தலைப்பிலான பிபிசியின் தொலைக்காட்சி ஆவணப் படத்திற்காக இந்த இளைஞர்களிடத்தில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

கேள்விகள் கேட்கப்பட்டவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள், இணையதள ஆபாசப் படங்கள் தமது பாலியல் ரீதியான எதிர்பார்ப்புகளை பாதித்துள்ளதாக கவலைப்பட்டுள்ளனர்.