காணாமல்போன விமானம்: மேலும் இரண்டு பொருட்கள் தென்பட்டன

பட மூலாதாரம், AFP
காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விமானங்களும் கப்பல்களும் தேடிவரும் நிலையில், இந்த விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கக்கூடிய சில புதிய பொருட்கள் பார்வையில் தென்பட்டுள்ளதாக மலேசியா கூறுகிறது.
ஒரு வட்டமான பொருளையும் ஒரு செவ்வகமான பொருளையும் ஆஸ்திரேலிய விமானம் ஒன்று கண்டதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பொருட்களை ஆஸ்திரேலியாவின் கடற்படைக் கப்பல் அடுத்த சில மணி நேரங்களில் ஒன்று தண்ணீரில் இருந்து எடுத்து பார்க்க முடியும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறினார்.
மலேசிய விமானத்தின் சேதமா இந்தப் பொருட்கள் என்று இன்னும் தெரியவில்லை என கென்பெர்ராவில் உள்ள நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.
இந்த காலத்தின் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்று குறிப்பிட்டு, அந்த மர்மத்துக்கு விடைகாணும் நெருக்கத்தில் விசாரணையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.








