'விமானம் காணாமல் போனதில் விமானிகளுக்கு தொடர்பு இருக்காது'

பட மூலாதாரம், AP
மலேசியன் ஏர் லைன்ஸ் விமானம் காணாமல் போனதற்கு அதன் விமானிகள் காரணமாக இருக்கலாம் என்ற சாத்தியத்தை அந்த விமானத்தின் இரு விமானிகளின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நம்ப மறுத்துள்ளார்கள்.
விமானத்தின் இருப்பிடம் அறியும் கருவி செயற்பாட்டை இழந்த பின்னர், விமானியின் அறையில் இருந்த ஒருவரிடம் இருந்து வந்த 'குட் நைட்' என்ற இறுதிச் செய்தி காரணமாக விமான சிப்பந்திகளின் பின்னணி குறித்து புலன் விசாரணை நடந்து வருகின்றது.
மத்திய ஆசியா முதல் இந்து சமுத்திரம் வரை விரிவுபடுத்தப்பட்ட பரப்பில் இந்த போயிங் 777 விமானத்தை தேடும் நடவடிக்கையில், 20 க்கும் அதிகமான நாடுகள் ஈடுபட்டுள்ளன.
ராடர் மற்றும் செய்மதி தரவுகளும் சோதிக்கப்படுகின்றன.
9 நாட்களுக்கு முன்னதாக இந்த விமானம் காணாமல் போனது.








