தாய்மை- தொடரும் பிரச்சினைகள்

தாய்மை-- வெவ்வேறு நாடுகளில் தொடரும் சிக்கல்கள் ( வங்கதேசத் தாய் ஒருவரது ஆவ|ணப்படம்)
படக்குறிப்பு, தாய்மை-- வெவ்வேறு நாடுகளில் தொடரும் சிக்கல்கள் ( வங்கதேசத் தாய் ஒருவரது ஆவ|ணப்படம்)

'சேவ் தெ சில்ட்ரன்' என்ற குழந்தைகளுக்கான சர்வதேச தன்னார்வ நிறுவனம், பெண்கள் தங்கள் தாய்மை அனுபவத்திலும், குழந்தை பெறுவதில் இருக்கும் சிக்கல்களை சமாளிப்பதிலும் , உலகின் பல பகுதிகளில் தொடர்ந்து பெருமளவு சாதக பாதக அம்சங்களை எதிர்கொள்கிறார்கள் என்று கூறியிருக்கிறது.

தாய்மை அனுபவத்தின் பிரச்சினைகளான, குழந்தைப் பேறின் போது இறப்பு, கர்ப்ப காலத்தில் இறந்துவிடுவது , குழந்தை இறப்பு மற்றும் குழந்தைகள் எத்தனை வருடங்கள் பள்ளிக்குப் போக முடிகிறது போன்ற அம்சங்களைக் கணக்கில் வைத்து இந்த அமைப்பு பல்வேறு நாடுகளை தரப்பட்டியலிட்டிருக்கிறது.

ஒரு பெண் தாயாய் இருப்பதற்கு மிகவும் கடினமான நாடு , காங்கோ ஜனநாயகக் குடியரசுதான் என்று அந்த அறிக்கை கூறுகிறது. காங்கோவில் போரும், வறுமையும்,தாய்மார்களை ஊட்டச்சத்தில்லாதவர்களாக்கியும்,அவர்களது வாழ்க்கையில் மிகவும் பலவீனமான கட்டங்களில் ஆதரவில்லாதவர்களாக்கியும் வைத்திருக்கின்றன.

பின்லாந்துதான் தாயாய் இருப்பதற்கும் மிகவும் சிறந்த இடம் , அதனை அடுத்து ஸ்வீடனும் நார்வேயும் வருகின்றன என்று இந்த முடிவுகள் கூறுகின்றன.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை இதில் 89வது இடத்திலும், இந்தியா 142வது இடத்திலும் இருக்கின்றன.

பிரிட்டன் 23வது இடத்தில் இருக்கிறது.

பங்களாதேஷ் 136வது இடத்திலும், பாகிஸ்தான் 139வது இடத்திலும் இருக்கின்றன.