அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் Vs பைடன் - முக்கிய கேள்விகள், முழுமையான பதில்கள்

ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
படக்குறிப்பு, ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த பிபிசி தமிழின் முக்கியமான கட்டுரைகளை தொகுத்து வழங்குகிறோம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்?

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கத் தேர்தல் வரும்போது அதில் உலக மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.

அமெரிக்க தேர்தல் எப்படி நடைபெறும் என்பது குறித்து சற்று விரிவாக எளிய முறையில் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு?

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

ஆறரை பில்லியன் டாலர்கள் - 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு ஆன செலவு இது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் நாற்பத்து எட்டாயிரத்து நாற்பத்து நான்கு கோடியே, 86 லட்சத்து 59 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும்.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு ஆகும் செலவில் மாற்றம் இருக்கலாம்.

அதிபரை தேர்ந்தெடுப்பது மக்கள் கிடையாதா?

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இதே போன்ற நிலை, 2020 அதிபர் தேர்தலிலும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிபரை தேர்ந்தெடுப்பது என்பது மக்கள் கையில் இல்லையா?

டிரம்ப் Vs பைடன் - முன்னணியில் இருப்பது யார்?

அமெரிக்காவின் இரண்டு அரசியல் கட்சிகள் காட்டும் சிலைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் இரண்டு அரசியல் கட்சிகளை குறிக்கும் சிலைகள்

குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்பை எதிர்த்து, வரவிருக்கும் தேர்தலில் களம் காண்கிறார் ஜோ பைடன். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், துணை அதிபராக இருந்தவராக இவர் அறியப்பட்டாலும், உண்மையில் பைடன் 1970களிலிருந்தே அமெரிக்க அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

டிரம்ப் Vs பைடன்: அமெரிக்கத் தமிழர்கள் ஆதரவு யாருக்கு அதிகம்?

இந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் தமிழர்கள், இந்தியர்களின் ஆதரவு யாருக்கு அதிகம்? ஏன்?

வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய பகுதிகள் எவை?

us presidential election results

2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் குறைவான வாக்குகளை பெற்றிருந்த போதிலும் எலக்டோரல் காலேஜ் முறையின் சாதகம் டொனால்டு டிரம்புக்கு அதிபராகும் வாய்ப்பை அளித்தது.

ஆனால், அதே சூழ்நிலை இம்முறை டொனால்டு டிரம்புக்கு கைகொடுக்குமா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் யார்?

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 who is the democratic candidate for the us presidential election going to be held in november 2020

பட மூலாதாரம், Reuters

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மேலும் 4 ஆண்டு காலம் தங்கி இருப்பதற்கு இப்போதைக்கு தடங்கலாக இருக்கும் ஒரே நபராக ஜோ பைடன் இருக்கிறார்.

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஜோ பைடன், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் எத்தனை பேர் போட்டி?

ப்ரோக் பியர்ஸ், மார்க் சார்லஸ் மற்றும் ஜேட் சிம்மன்ஸ் (இடமிருந்து வலமாக)

பட மூலாதாரம், Peter Ruprecht / Mark Charles / Michael Gillman

படக்குறிப்பு, ப்ரோக் பியர்ஸ், மார்க் சார்லஸ் மற்றும் ஜேட் சிம்மன்ஸ் (இடமிருந்து வலமாக)

கடந்த 230 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் அதிபர் ஆட்சிமுறை இருந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் மட்டுந்தான் இதுவரை சுயேச்சை வேட்பாளராக இருந்து அந்த பதவியை அடைந்த ஒரே நபர்.

ஆம், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தை குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளே ஆக்கிரமித்து வருகின்றன.

ஆட்சி மாற்றம் ஏற்படுவது சீனாவுக்கு ஆதரவாக அமையுமா?

us presidential election 2020

அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் தேசிய கூட்டங்கள், அடுத்து வரும் அதிபரின் உள்நாட்டு கொள்கைகள் எந்த மாதிரி இருக்கும் என்ற ஒரு வெளிச்சத்தை அமெரிக்க வாக்காளர்களுக்கு அளிக்கும்.

ஆனால், இந்தாண்டு சீனாவுடனான பிரச்சனைக்குரிய உறவு குறித்தும் பலரையும் சிந்திக்க வைக்கிறது.

கமலா ஹாரிஸ்: துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளிப் பெண்யார் ?

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிபைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ்.

முன்னதாக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான போட்டியில் கடுமையாக ஈடுபட்டு தோற்றவர் கமலா.

அடுத்த அமெரிக்க அதிபரிடம் இந்தியா என்ன எதிர்பார்க்கும்?

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் அதிபரின் இந்த அடையாள நடவடிக்கை நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது.

ஆளும் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் யார் ?

மைக் பென்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மைக் பென்ஸ்

அமெரிக்க வெள்ளை மாளிகைக்குழுவில் ஒரு மிக முக்கிய நபராக உருவெடுத்துள்ளார் துணை அதிபர் மைக் பென்ஸ்.

கடந்த 4 ஆண்டுகளாக, அவர் ஒரு சிறந்த துணை அதிபராக பணியாற்றி, நிர்வாகத்தில் முக்கிய நிகழ்வுகளை முடிவெடுக்கும் குழுக்களை வழிநடத்தி, ஊடகங்களை தனது சிறப்பான பேச்சினால் எதிர்கொண்டார்.

டிரம்ப் எப்படி உலகை மாற்றினார்?

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

அமெரிக்க அதிபர் அந்த நாட்டுக்கான தலைவர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட உலகின் மிகவும் அதிகாரம் மிக்க நபராகவும் அவர் விளங்குகிறார்.

அவர் செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகள் நமது வாழ்க்கையை மாற்றக் கூடியவை. அதில் டொனால்டு டிரம்ப் விதிவிலக்கல்ல. எனவே, உண்மையிலேயே டிரம்ப் தனது நான்காண்டு ஆட்சியில் உலகில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினார்?

தமிழர்களின் வாக்கை நிர்ணயிக்கும் காரணிகள் என்னென்ன?

இந்த தேர்தலில் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு மற்றும் வரிவிதிப்புக் கொள்கை உள்ளிட்டவை மக்களின் வாக்குகளை பெறுவதில் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வாழும் தமிழர்களிடம் பிபிசி தமிழ் கேட்டறிந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: