சிங்கப்பூர் பொருளாதார நிலை: நாளுக்கு நாள் நலிந்து வரும் வளமான நாட்டின் நிலவரம்

பட மூலாதாரம், ROSLAN RAHMAN
கொரோனா தொற்றுநோய் ஆசியாவின் வர்த்தக சார்பு பொருளாதாரங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில், இரண்டாவது காலாண்டில் மதிப்பிடப்பட்ட மந்தநிலையைக் காட்டிலும், உண்மைநிலை இன்னும் மோசமாக உள்ளது.
கோவிட்-19ஆல் சிங்கப்பூர் மோசமாக பாதிக்கப்பட்டது. வைரஸ் பரவாமல் தடுக்க இங்கே பொதுமுடக்கம் (லாக்டவுன்) அமல்செய்யப்பட்டது. இது கிட்டத்தட்ட இரண்டாவது காலாண்டு முழுமைக்கும் நடைமுறையில் இருந்தது.
"வரவிருக்கும் காலாண்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் நிலை என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல், உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பொருளாதார மீட்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதிலும் நிச்சயமற்ற தன்மையும் உள்ளது," என்று சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில்துறை நிரந்தர செயலர் கேப்ரியல் லிம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
"சிங்கப்பூரின் பொருளாதாரம் குறித்த கண்ணோட்டம், மே மாதத்திலிருந்து சற்று பலவீனமடைந்துள்ளது" என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டின் (ஜிடிபி) இரண்டாவது காலாண்டோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.2 சதவீதம் குறைந்துள்ளது. மறுபுறம், செவ்வாய்கிழமை வெளியான, அரசாங்க தரவின் முன்கூட்டிய மதிப்பீடு, 12.6 சதவிகித வீழ்ச்சியைக் காட்டியது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

கடந்த மூன்று மாதங்களாக, ஆண்டு மற்றும் பருவகால நிலைமைகளின் சரிசெய்யப்பட்ட அடிப்படையில் பொருளாதாரம், 42.9% வீழ்ச்சியடைந்துள்ளது. இது, முன்னெப்போதுமே, நடக்காத ஒன்றாகும். 41.2% வீழ்ச்சியை சுட்டிக்காட்டிய, அரசின் ஆரம்ப மதிப்பீட்டை காட்டிலும் இது அதிகம்.
இந்த புள்ளிவிவரங்கள் ஆய்வாளர்களின் மதிப்பீடுகளுடன் பொருந்துகின்றன.
என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?

பட மூலாதாரம், ROSLAN RAHMAN
ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஐந்து முதல் ஏழு சதவிகிதம் வரை இருக்கும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. முன்னதாக இது நான்கு முதல் ஏழு சதவிகிதமாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டது. போக்குவரத்து மற்றும் சுற்றுலா மையம் என்று அழைக்கப்படும் சிங்கப்பூர், தற்போது வரலாற்றின் மிக மோசமான கட்டத்தை கடந்து வருகிறது.
"இரண்டாவது காலாண்டில் வீழ்ச்சி மற்றும் முழு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைந்திருப்பது ஆகியன, மந்தமான பொருளாதார மீட்சியை சுட்டிக்காட்டுகிறது" என்று மேபேங்க் பொருளாதார நிபுணர் ஷுவா ஹக் பின், கூறினார்.
பொதுமுடக்கம் முடிந்த பின்னரும், எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி விதிகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக பொருளாதாரம் வேகம் பெறுவது எளிதல்ல என்று அவர் குறிப்பிடுகிறார்.
உலகளாவிய நிதி மையமான சிங்கப்பூரில், இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது. முதல் காலாண்டில் , முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 0.3 சதவிகிதம் சரிவு மற்றும் முந்தைய காலாண்டை ஒப்பிடும்போது 3.1 சதவிகிதம் சரிவு, மந்தநிலையின் அறிகுறியாகும்.
ஜப்பான் போன்ற பிற ஆசிய நாடுகளும் இரண்டாவது காலாண்டில் தங்கள் பொருளாதார நிலை குறித்த அறிக்கையை வெளியிடவுள்ள நிலையில், சிங்கப்பூரின் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அங்கும் வீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தென் கொரியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் முதல் வாரத்தில் இரட்டை இலக்க சரிவை பதிவு செய்தது.
தொற்றுநோய் அதிகம் பரவியதை தொடர்ந்து, பொருளாதாரங்கள் மீண்டும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இது பயனுள்ளதாக இருக்கும். மக்களின் எதிர்பார்ப்பு நிலைத்திருந்தால், பொருளாதாரம் மீட்சியடைவதை காணமுடியும் என்று ஓசிபிசி வங்கியின் கருவூல ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் பிரிவு தலைவரான செலினா லிங் தெரிவித்தார்.
சிங்கப்பூர் மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கையில் மார்ச் மாதத்தில் சிறிது நிவாரணம் அளித்தது, அதே நேரத்தில் தொற்றுநோயின் விளைவுகளைத் தணிக்க அரசு 100 பில்லியன் சிங்கப்பூர் டாலர்களை (72 பில்லியன் டாலர்) நிவாரணம் வழங்கியது.
மலேசியாவில் இருந்து பிரிந்த சிங்கப்பூர்
மிகக் குறுகிய காலத்தில் சிங்கப்பூர் அடைந்த முன்னேற்றம் எந்தவொரு நாட்டிற்கும் ஊக்கத்தை அளிக்கக்கூடியது. சிங்கப்பூரின் அகலம் வெறும் 48 கிலோமீட்டர் ஆகும். இந்த நாடு நியூயார்க்கின் பாதியை விட சிறியது. மக்கள்தொகையும் 55 லட்சம் மட்டுமே. ஆனால் தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரை, இந்த பகுதியில் எந்த நாடும் இதற்கு முன்னால் நிற்கமுடியாது. கிழக்கு ஆசியாவில் சீன வம்சாவளியைச் சேர்ந்த குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரே நாடு சிங்கப்பூர்.
1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி, சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக மாறியது. சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்ததற்கு பொருளாதார மற்றும் அரசியல் வேறுபாடுகள் முக்கிய காரணங்களாக இருந்தன.
இந்த வேறுபாடுகள் காரணமாக, 1964ஆம் ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் , இன வன்முறைகள் வெடித்தன. சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ, மலேசியாவிலிருந்து பிரியும் அறிவிப்பை செய்தபோது உணர்ச்சிவசப்பட்டார்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போது, அவர் கண்ணீர் வடித்தார். "நாம் 23 மாதங்களுக்கும் குறைவாகவே மலேசியாவுடன் இணைந்திருந்தோம்" என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












