இன்றைய செய்தி: நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா - 102 நாள்களுக்குப் பின் உள்ளூர் தொற்று மற்றும் பிற செய்திகள்

நியூசிலாந்து பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் உள்ளூர் பரவல் மூலம் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அந்நாட்டின் பெரிய மாநகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆக்லாண்ட் நகரத்தில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் கொஞ்சம் சமூக இடைவெளி அறிவுறுத்தல்கள் கடைபிடிக்கப்படும்.

நியூசிலாந்து கொரோனா தொற்றை கையாள்வதில் பிற நாடுகளைக் காட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது.

பிப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து இன்றுவரை 1200 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு எந்த உள்ளூர் தொற்றும் ஏற்படாமல் இருந்தது. ஒருசில நாடுகளே இப்படிப்பட்ட மைல்கல்லை எட்டியுள்ளன.

மார்ச் மாதம் நியூசிலாந்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்க கட்டுப்பாடுகள் ஏறக்குறைய முழுமையாக தளர்த்தப்பட்டிருந்தன.

நியூசிலாந்து சர்வதேச அளவில் பெரும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து: அனுமதி வழங்கிய ரஷ்யா

புதின்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இந்த தடுப்பு மருந்துக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாகவும் புதின் கூறுகிறார்.

ராமர் கோயிலுக்கு பிறகு, இப்போது பொது சிவில் சட்டத்தின் பக்கம் கவனம் திரும்புமா?

மணப்பெண் (கோபுப்படம்)

பட மூலாதாரம், AFP/GETTY

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், பாரதிய ஜனதா கட்சி, தனது தேர்தல் அறிக்கையின் இரண்டு முக்கிய வாக்குறுதிகளை பூர்த்தி செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதலாவதாக, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்வது, இரண்டாவதாக, அயோத்யாவில் ராமர் கோயில் கட்டுதல்.

ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா முடிந்த மறுநாளே, சமூக ஊடகங்களில் பலர், மூன்றாவது வாக்குறுதியான பொது சிவில் சட்டம் அதாவது 'யூனிஃபார்ம் சிவில் கோட்' அமல்படுத்துவது பற்றி பதிவிட்டு, பாஜகவின் கவனத்தை ஈர்த்தனர்.

சமூக ஊடக பயனர்கள், காலையில் இருந்தே அதைப் பற்றி ட்வீட் செய்யத் தொடங்கினர். இவற்றில், மிகவும் கவனிக்கவேண்டிய ட்வீட் ,பத்திரிகையாளர் ஷாஹித் சித்திகி என்பவருடையது. அவர் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படக்கூடிய தேதியை ஊகித்து, 2021-ஆவது ஆண்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் அரசு, இந்தப் பணியை முடிக்கும் என்று எழுதினார்.

எரி நட்சத்திரங்கள்: விரைவில் விண்கல் பொழிவு

விண்கல்

பட மூலாதாரம், Getty Images

ஸ்விப்ஃட்-டட்டில் எனப்படும் வால் நட்சத்திரம் தனது சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியைப் போல இந்த வால் நட்சத்திரமும் சூரியனை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சுற்றி வருகிறது.

``ஒவ்வொரு ஆண்டும் அந்த வால் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையில் பூமி மோதும் போது, இடிபாடுகள் குப்பைகளாக சிதறுகின்றன'' என்று கிரீன்விச் ராயல் அருங்காட்சியக வானவியல் நிபுணர் எட்வர்டு புளூமர் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

ARUN SANKAR

பட மூலாதாரம், Getty Images

2020-21ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் துவங்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேருவதற்கான சேர்க்கையும் ஆகஸ்ட் 17ஆம் தொடங்கும் என்று துவங்குமென தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: