தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பட மூலாதாரம், ARUN SANKAR
2020-21ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் துவங்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேருவதற்கான சேர்க்கையும் ஆகஸ்ட் 17ஆம் தொடங்கும் என்று துவங்குமென தெரிவித்தார்.
சேர்க்கை நடைபெறும் நாளன்றே மாணவர்களுக்கான விலையில்லா பாடப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.
கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி தனியார் பள்ளிக்கூடங்களில் சேருவதற்கு, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் டிசம்பர் மாதம் வரை பள்ளிக்கூடங்களைத் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பதால், பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்று கேட்டபோது, அனைத்து தரப்பினரின் கருத்தையும் அறிந்த பிறகு, முதலமைச்சர் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டபோது, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

தமிழ்நாட்டில் 9,45,077 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்துவந்த நிலையில், 9,39,829 மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், சுமார் 5,248 பேர் மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த கே.ஏ. செங்கோட்டையன், கடந்த கல்வி ஆண்டில் உயிரிழந்தவர்கள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுக்கே வராதவர்கள், ஒரு நாள்கூட பள்ளிக்கூடத்திற்கு வராதவர்களின் எண்ணிக்கை 5,248 என்றும் அவர்கள் தவிர மற்றவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது ரஷ்யா
- பெண்களும், பிராமணர் அல்லாதோரும் கல்வி கற்பதை எதிர்த்தாரா திலகர்?
- 1989-இல் இந்தி உரையை மொழிபெயர்த்தாரா கனிமொழி? வைரலாகும் புகைப்படங்களின் பின்னணி என்ன?
- பாகிஸ்தான் வரைபடத்தில் குஜராத்தின் ஜுனாகத் பகுதி: இம்ரான் கான் அரசுக்கு என்ன லாபம்?
- திருப்பதி கோயில் ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா: சமூக வலைத் தளங்களில் கடும் விமர்சனம்
- ஐக்கிய அரபு அமீரக விசா, பர்மிட்டுகளுக்கு 1 மாதம் காலக்கெடு நீட்டிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












