சீனாவுக்காக அமெரிக்காவில் உளவு பார்த்த சிங்கப்பூர் குடிமகன் மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவில் சிக்கிய சீன உளவாளி

அமெரிக்காவில் சீனாவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிங்கப்பூர் குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜுன் வீ இயோ எனும் அந்த நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் என கூறுகிறது அமெரிக்கா.

அமெரிக்காவில் உள்ள தனது அரசியல் ஆலோசனை மையம் மூலம் சீன உளவு அமைப்புக்காகத் தகவல்களைத் திரட்டினார் என்று குற்றஞ்சாட்டும் அமெரிக்கா, சீன ராணுவத்துடன் தொடர்புடைய மற்றொரு ஆய்வு மாணவியும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது.

முன்னதாக சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக சீனாவில் அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுவதற்கான தடையை சீனா அறிவித்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை திருட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஹாஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டது.

Dil Bechara: தில் பெச்சாரா - சினிமா விமர்சனம்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அகால மறைவுக்குப் பிறகு பாலிவுட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த திரைப்படம் இது. ஜான் க்ரீன் என்ற அமெரிக்க எழுத்தாளர் 2012 வெளியிட்ட The Fault in Our Stars நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் Dil Bechara. நாவலைவிட்டு சில இடங்களில் விலகியிருக்கிறார்கள். ஆனால், அடிப்படையில் பெரிய மாற்றமில்லை.

முற்றும் இருநாட்டு மோதல்: அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவு

அமெரிக்கா தனது நாட்டிலுள்ள சீன தூதரகத்தை மூட உத்தரவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் செங்டு நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரிலுள்ள சீன தூதரகத்தை மூடுவதற்கு அந்த நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்கா மீதான தங்களது இந்த நடவடிக்கை "தேவையான பதில்" என்று சீனா கருத்துத் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து: யாருக்கு என்ன உரிமை? எவ்வாறு அளிக்கப்படும்?

இரண்டாம் உலகப் போரின் போது, மக்களின் மனதில் எழுந்த ஒரே கவலை, அது எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான். 75 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மனநிலை தற்போது உருவாகியுள்ளது.உலகம் முழுவதிலும் ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு லட்சம் பேர் இதற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு - நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் புதிதாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,504 பேர் குணமடைந்துள்ளனர். 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 6785 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1,299 பேருக்கும் விருதுநகரில் 424 பேருக்கும் செங்கல்பட்டில் 419 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 349 பேருக்கும் கன்னியாகுமரியில் 266 பேருக்கும் மதுரையில் 326 பேருக்கும் ராணிப்பேட்டையில் 222 பேருக்கும் தேனியில் 234 பேருக்கும் திருவள்ளூரில் 378 பேருக்கும் தூத்துக்குடியில் 313 பேருக்கும் திருச்சியில் 217 பேருக்கும் விருதுநகரில் 424 பேருக்கும் புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :