துருக்கி ஓட்டமான் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும் - வெடிப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் உலகத்தை எப்படி மாற்றியது?

- எழுதியவர், ஆசாத் அலி,
- பதவி, பிபிசி உருது சேவை
துருக்கி ஓட்டமான் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும் கட்டுரையின் இரண்டாம் பாகம் இது.
முதல் பாகத்தில் உஸ்மானிய அரசின் பீரங்கி ஞானம், அதன் போர் வெற்றி ஆகிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. முதல் பாகத்தை படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்.
துருக்கிய பம்பாயி பீரங்கி
உஸ்தாத் ஆர்பனின் பீரங்கிகள் பாம்பார்ட்ஸ் என்று அழைக்கப்படும் பீரங்கிகளின் வகையின் கீழ் வருகின்றன.
'கன்ஸ் ஃபார் தி சுல்தான்' புத்தகத்தில், அவற்றில் மிகப்பெரிய பீரங்கிகள் 50 முதல் 80 சென்டிமீட்டர் விட்டம் கொண்டவை மற்றும் ஆறாயிரம் முதல் 16 ஆயிரம் கிலோ கிராம் வரை எடையுள்ளவை என்றும் தோட்டாக்கள் 150 முதல் 700 கிலோ வரை எடையுள்ளவை என்றும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. .
ஐரோப்பாவில், அந்த பீரங்கிகள், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கைவிடப்பட்டன, ஆனால் இதுபோன்ற சில பீரங்கிகள், 1510 மற்றும் அதற்கு பிறகும், உஸ்மானியா சாம்ராஜ்யத்தில் தொடர்ந்து தயாரிக்கப்பட்டன.
அந்த பீரங்கிகளை தயாரிக்க, 'ஜமாத் டோபிச்சியன் அஹ்னக்ரான்' என்ற பெயரில் ஒரு இரும்பு ஆசாரிகள் குழு பணியாற்றியது. 1490 முதல் 1527 வரை அவர்களின் எண்ணிக்கை எட்டு முதல் 29 வரை இருந்தது
1517-1518 ஆம் ஆண்டில், முஸ்லீம் மற்றும் யூத ஆசாரிகள் , 22 வார்ப்பிரும்பு பீரங்கிகளை உற்பத்தி செய்தனர், அவற்றில் நான்கு பெரிய பீரங்கிகள் 714 செ.மீ நீளமும், ஒன்பதின் நீளம் 558 செ.மீ மற்றும் சிறையை ஒன்பது பீரங்கிகளின் சராசரி நீளம், 491 செ.மீ ஆக இருந்தது என்று ஆகஸ்தோன் கூறுகிறார்.
இந்த பீரங்கிகள், ஐரோப்பாவில் சராசரியாக 6210 கிலோ எடையுடன் இருந்தன. ஹாப்ஸ்பர்க் பேரரசின் ஆட்சியாளரான முதலாம் மேக்ஸ்மிலியனனின் (1493-1519) மிகப்பெரிய குண்டுவீச்சு பீரங்கி 5600 முதல் 7280 கிலோ வரை எடையைக் கொண்டிருந்தது.
இருப்பினும், உஸ்தாத் ஆரோபானின் வழியில், உஸ்மானி வல்லுநர்கள் 15 ஆம் நூற்றாண்டில் இரண்டு தேவஹேகல் பீரங்கிகளைத் தயாரித்தனர். சுல்தான் இரண்டாம் மெஹ்மத்க்காக, 1467 இல் தயாரிக்கப்பட்ட ஒரு வெண்கல பீரங்கியின் எடை 17500 கிலோ. 1867 ஆம் ஆண்டில், சுல்தான் அப்துல்அஜிஸ், 15 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட 18 டன் கனமான பீரங்கியை விக்டோரியா மகாராணிக்குப் பரிசளித்தார்.
அந்த பீரங்கிகளின் அளவு காரணமாக அவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்வது கடினம் என்று ஆகஸ்தோன் எழுதுகிறார். இந்த சிக்கலுக்குத் தீர்வு என்னவென்றால், அந்த பீரங்கிகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் , ஒட்டகங்கள் மற்றும் பிற விலங்குகளின் மீது ஏற்றப்பட்டு, முற்றுகையிடப்பட்ட இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு , அங்கு பீரங்கி தயாரிக்கப்பட்டது.
இந்த பெரிய குண்டுவீச்சு பீரங்கிகள் உஸ்மானியர்களுக்கு பைசண்டைன், பால்கன் மற்றும் பல ஹங்கேரிய கோட்டைகளை வெல்ல உதவியது.
எவ்வாறாயினும், இந்த பீரங்கிகளால் மட்டுமே போரை வெல்ல முடியாது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
மேலும் உஸ்மானி வரலாற்றிலிருந்து இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு குஸ்துந்துனியா வெற்றிக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சுல்தான் இரண்டாம் மெஹ்மத் சார்பாக 1456இல்,பெல்க்ரேட் முற்றுகையிடப்பட்டது.
நேரில் கண்ட சாட்சியின் கூற்றுப்படி, சுல்தான் மெஹ்மத்தின் 22 குண்டுவீச்சு பீரங்கிகள் கோட்டையை அழித்தன, ஆனால் கோட்டையின் பாதுகாவலர்களுக்கு உடனடி மற்றும் பயனுள்ள உதவியால் உஸ்மானிக்கு அந்த நேரத்தில் பெல்க்ரேடை வெல்ல முடியவில்லை.
ஐரோப்பியர்கள் மீது உஸ்மானி பீரங்கிகள் ஆதிக்கம் செலுத்தியதற்கான சான்றுகள் என்னவென்றால் , ஐரோப்பாவில் மிகவேகமாக , ஒன்றன்பின் ஒன்றாகக் கோட்டைகள் , அவர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்ததே என்று ஆகஸ்தோன், எழுதுகிறார். உதாரணமாக, 1521 மற்றும் 1566 க்கு இடையில், ஹங்கேரியின் 13 கரின்ஸ் பத்து நாட்கள் மற்றும் ஒன்பது கோட்டைகள், இருபது நாட்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கமுடிந்தது.
அவர் முற்றுகை பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார், அப்போதைய புகழ்பெற்ற உஸ்மானியா வரலாற்றாசிரியர் இப்ராஹிம் பாஸ்வி (ஹங்கேரிய எல்லையில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தவர்). "முதலில் அவர் (மெஹ்மத் பாஷா) அனைத்து பீரங்கிகளையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அடிக்கும்படி கட்டளையிட்டார். பின்னர் அதே இடம் ஒவ்வொன்றாகக் குறிவைக்கப்பட்டது," என்று கூறுகிறார்.
1595இல் எஸ்தர்கான் முற்றுகையின்போது மெஹ்மத் பாஷா கிறிஸ்தவர்களிடமிருந்து இந்த நுட்பத்தைக் கற்றுக்கொண்டார் என்று பைஸ்வி எழுதுகிறார்.
வெடிப்பொருள் உஸ்மானியா சாம்ராஜ்யத்தை அடைந்தது எப்படி?
7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் சீனாவில் வெடிமருந்து முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. மேலும் 1280க்குப் பிறகு வெடிபொருள் ஆயுதங்கள், அங்கு முறையாகத் தயாரிக்கப்பட்டதாக, ஆகஸ்தோன் எழுதுகிறார்.14 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில், இந்த ஆயுதங்கள் ஐரோப்பாவின் போர்க்களங்களிலும் முற்றுகைகளிலும் பயன்படுத்தப்பட்டன.

பட மூலாதாரம், HULTON ARCHIVE / GETTY IMAGES
நினைவில் கொள்ளவும், 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உஸ்மானியா சாம்ராஜ்யம் மலரக்கூட இல்லை, அது ஒரு பிராந்திய சக்தியாகவே இருந்தது .
இந்த காலகட்டத்தில்தான் இந்த ஆயுதங்கள் ஹங்கேரி மற்றும் புலாக்கன் பகுதிகளை அடைந்தன என்றும், 1380களில் உஸ்மானியர்களும், அவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள்.
அவர் இரண்டு ஒட்டோமான் வரலாற்றாசிரியர்களைக் குறிப்பிட்டுள்ளார், அவர்களில் ஒருவரின் கூற்றுப்படி, 1389 இல் கொசோவோ போரில்,உஸ்மானியர்கள் முதன்முதலில் பீரங்கிகளைப் பயன்படுத்தினார்கள். மேலும் அவர் ஹைதர் என்ற பெயருள்ள பீரங்கிகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு இடத்தில், அவர்களுக்கு 1364 ஆம் ஆண்டு முதல் பீரங்கிகளைத் தயாரிக்கத் தெரியும் என்றும், 1386 ஆம் ஆண்டில் அவர்கள் அதை முதன்முதலில் பயன்படுத்தியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
உண்மையான கேள்வி, முதல் வெடிபொருள் ஆயுதம் எப்போது தயாரிக்கப்பட்டது என்பது அல்ல, அது எப்போது திறம்படப் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது என்பதே ஆகும். அது 15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது என்று ஆகஸ்தோன் கூறுகிறார்.
புதிய ஆயுதங்களின் பயன்பாடு மெதுவாக வந்தது என்று அவர் எழுதுகிறார்.
துப்பாக்கியை வாங்குவது, துப்பாக்கிக் குண்டு கிடைப்பது, அதன் பயன்பாட்டிற்காகச் சிறப்புக் குழுக்களை நிறுவுவது ஒரு சவாலாக இருந்தது, அதற்காக அனைத்து அரசுகளும் தயாராக இல்லை, ஆனால் உஸ்மானியர்கள் தங்கள் நடைமுறை மற்றும் சமூக கட்டமைப்பில் நெகிழ்வுத்தன்மையில் பெரும் திறமையைக் காட்டினர்.

பட மூலாதாரம், THEOPHILOS HATZIMIHAIL
உஸ்மானியர்கள் , சம்பளம் பெறும் படையினராக, காலாட்படை மற்றும் துப்பாக்கிகள் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டிற்கான சிறப்புப் படைகளை அமைப்பதும்,உஸ்மானியர்களின் முக்கிய பணியாக இருந்தது.
ஆசியாவில் துப்பாக்கிக் குண்டு பற்றிய தகவல்கள் , சீனர்களுடன் வர்த்தகம் அல்லது நேரடி தொடர்பு மூலம் எட்டப்பட்டதாக ஆகஸ்தோன் எழுதுகிறார்.
"துப்பாக்கிச்சூடு மற்றும் அது தொடர்பான ஆயுதங்கள் பற்றி மங்கோலியர்கள் 1230களில் இருந்து அறிந்திருந்தனர், மேலும் 13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த தகவல்கள் மத்திய ஆசியா, இரான், இராக் மற்றும் ஷாம் (இன்றைய சிரியா) ஆகியவற்றை அடைந்தன.
திமூர் லுங்கின் மகன் ஷாரூக் (1405 முதல் 1447 வரை) தனது சாம்ராஜ்யத்தில், (இது இரானின் சில பகுதிகள், அக்சஸ் நதி, அஜர்பைஜான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் வரை விரிவடைந்தது) மக்களுக்குத் துப்பாக்கிகள் பற்றித் தெரிந்திருந்ததோடு கூடவே, அவை தயாரிக்கப்படும் வந்ததாகத் தெரிகிறது.
அதே நேரத்தில், "1434 முதல் 1435 வரை, ஃபாரூக் என்ற கைவினையாளர், பீரங்கியைத் தயாரித்தார். இது குறைந்தது 320 கிலோ எடையைக் கொண்ட குண்டை சுடக்கூடியது.
வெடிப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் உலகத்தை எப்படி மாற்றியது?
துப்பாக்கிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி ஐரோப்பாவுக்கு அதிகம் தெரியும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்று ஆகஸ்தோன் எழுதுகிறார். அதே நேரத்தில், அந்த ஆயுதத்திற்கு அங்குதான் உயிர் கிடைத்தது.
"இது வரவிருக்கும் நூற்றாண்டுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் வடிவத்தை மாற்றியது. துப்பாக்கியின் வருகையும் அதன் பரவலான பயன்பாடும், அரசுகள் மற்றும் பெரிய பேரரசுகளின் , போரிடும் முறையை, முற்றிலுமாக மாற்றியது," என்று குறிப்பிடுகிறார்.
இப்போது ராணுவ நிலையில் போட்டியிடும் திறனுடன் இருக்கும்பொருட்டு, பீரங்கிகள், பீரங்கி தாக்குதலைத் தாக்குப்பிடிக்கக்கூடிய கோட்டைகள், நிலையில் பீரங்கிகள், துப்பாக்கிகளுடன் காலாட்படை மற்றும் துப்பாக்கிகளுடன் கடற்படைக் கப்பல்கள் என்பது அவசியமாகிவிட்டது.
துப்பாக்கி ஏந்திய காலம் ஐரோப்பாவிலிருந்தது, அங்கு சமவெளிகளுக்குப் பதிலாக, போர் பெரும்பாலும் முற்றுகை என்று அழைக்கப்பட்டது. பீரங்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் மூலம் முற்றுகைகளில் பெறும் வெற்றி மற்றும் ஹங்கேரி, ஹாப்ஸ்பர்க், வெனிஸ் மற்றும் சஃபாவிஸ் போன்ற எதிரிகளை சமாளிக்கவும், சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பிற்கும், இது முக்கியமானது
பல ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இடைக்காலத்தின் இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகள் துப்பாக்கிக் குண்டு மற்றும் அச்சிடுதல் ஆகும்.
ஒரு பீரங்கி கட்டுவதற்கும், பீரங்கிகளால் பாதுகாக்கப்பட்ட கோட்டைகளை வைத்திருப்பதற்கும் சக்தியும், சக்கரவர்த்திகளிடம் மட்டுமே இருக்க முடியும் என்பதால், இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு சிறிய அதிகார மையங்களைத் தக்கவைத்துக்கொள்வது கடினமாகிவிட்டது என்று அவர் எழுதினார். இருப்பினும், அந்தக் காலத்தின் மாற்றம் துப்பாக்கியால் மட்டுமே அல்ல, துப்பாக்கியின் முக்கியத்துவம் குறித்த விவாதம் இன்றுவரை நடந்து வருகிறது என்று கூறும் வரலாற்றாசிரியர்களும் இருக்கிறார்கள்.

பட மூலாதாரம், FAUSTO ZONARO
14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டின் உஸ்மானி சுல்தான்களின் நடைமுறை புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை எளிதாக்கியது மற்றும் துப்பாக்கிகளை நிரந்தரமாக உற்பத்தி செய்வதற்கான நிர்வாகக் கட்டமைப்பை அமைத்தது என்று அவர் எழுதுகிறார். மத்திய தரைக்கடல், ஹங்கேரி மற்றும் பைசண்டைன் சுல்தான்களின் வலுவான கோட்டைகள் தங்கள் போர்க் கொள்கையை மாற்றவும் புதிய ஆயுதங்களைப் பின்பற்றவும் கட்டாயப்படுத்தின.
"18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை ஐரோப்பாவில் துப்பாக்கி தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை, இந்த நேரத்தில் ஐரோப்பிய தொழில்நுட்பம் மற்றும் உஸ்மானியர்களின் தளவாட ஆதிக்கத்தின் உதவியுடன், ஐரோப்பாவுடன் போட்டியிடுவது அவர்களுக்கு கடினமாக இருக்கவில்லை."
பீரங்கி மற்றும் சாம்ராஜ்யத்தில் உள்ள கனிம இருப்பு
16ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை உஸ்மானியர்கள் 30 முதல் 500 கிராம் எடையுள்ள குண்டுகளை வீசும் பீரங்கிகள் முதல் 31 ல் இருந்து 74 கிலோ வரை எடையுள்ள குண்டுகளை வீசும் பீரங்கிகளைப் பயன்படுத்தினர் என்று அவர் எழுதுகிறார்.
இருப்பினும், 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில், 100 கிலோவுக்கு மேல் எடையுள்ள குண்டுகளை வீசிய 'பாம்பார்ட்' பீரங்கிகளும் அவற்றின் பீரங்கி கிடங்கின் ஒரு பகுதியாக இருந்தன.
உஸ்மானி ஆவணங்களில், 15 முதல் 20 கிலோ குண்டுகளை வீசக்கூடிய பீரங்கிகளுக்கு 'கிலா குப்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உஸ்மானி மற்றும் அவரது போட்டி சுல்தான்களின் ஆயுதங்களுக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை என்று ஆகஸ்தோன் எழுதுகிறார்.
16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில், உஸ்மானி தனது பெரிய மற்றும் நடுத்தர அளவிலான பீரங்கிகளை வெண்கலத்தால் உருவாக்கி வந்ததாகவும், இது ஆஸ்திரியா, ஸ்பெயின் மற்றும் ஆங்கில பீரங்கிகளுடன் ஒப்பிடுகையில் இலகுவாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது என்றும் அவர் கூறினார்.
உஸ்மானி சாம்ராஜ்யத்தின் வரம்பில் தாமிரம் அதிக அளவிலிருந்தது. 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில், பித்தளை, இரும்பு மற்றும் ஈயம் உற்பத்தியில் சுல்தானகம் தன்னிறைவு பெற்றது மற்றும் வெளியிலிருந்து தகரத்தை மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.
"16, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில், உஸ்மானியா சுல்தானின் ஆட்சி ஐரோப்பாவின் பிடா (ஹங்கேரி) முதல் ஆசியாவின் பாஸ்ரா வரை நீட்டிக்கப்பட்டபோது, கிட்டத்தட்ட எல்லா முக்கிய பகுதிகளிலும், துப்பாக்கி குண்டு உற்பத்தி செய்யப்பட்டது."
இருப்பினும், இந்த உற்பத்தி 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து குறையத் தொடங்கியது, அதன் பின்னர் ஐரோப்பாவிலிருந்து துப்பாக்கி இறக்குமதி செய்வதில் அதிகரிப்பு ஏற்பட்டது.
இருப்பினும், நிர்வாக மறுசீரமைப்பு சிறிது காலத்திற்குப்பிறகு , மீண்டும் தன்னிறைவு பெறச்செய்தது.
வெடிமருந்துகளின் முக்கியத்துவம்
'கன்ஸ் ஃபார் தி சுல்தான்' புத்தகத்தில், பிரதமர் ஹசன் பாஷா 1603 ல், சுல்தானுக்கு விண்ணப்பித்திருப்பது "எனது கெளரவமான பேரரசே, சுல்தானின் உண்மையான சக்தி துப்பாக்கிகளில் இருக்கிறது என்று உன்ஙளுக்கே தெரியும், துப்பாக்கிக் குண்டு இல்லாமல் போர் சாத்தியமற்றது. துப்பாக்கிக் குண்டு மற்றவை போல அல்ல. துப்பாக்கிக் குண்டு பற்றாக்குறை உள்ள இடத்தில், தங்க நாணயத்தின் கடல்கூட, துப்பாக்கிகளின் இடத்தை பிடிக்கமுடியாது, துப்பாக்கி குண்டுகளால் மட்டுமே ,கோட்டைகளைப் பாதுகாக்கமுடியும், போர்களை வெல்லமுடியும்."
1489 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி வெனிஸ் செனட்டின் நிமிடங்களில், "இந்த ஆயுதம் மற்றும் பீரங்கிகள் இல்லாமல், எந்த அரசையும் காப்பாற்ற முடியாது, அதைப் பாதுகாக்கவோ முடியாது" என்று ஆகஸ்தோன் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து , சுட்டிக்காட்டியுள்ளார்.
துப்பாக்கி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று நைட்ரஸ் அமிலம். எந்தவொரு பெரிய சுல்தானுக்கும், துப்பாக்கியின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எளிதில் கிடைப்பது, அதன் இராணுவத்தின் ஆதிக்கத்தைப் பராமரிக்க முக்கியமானது.
உஸ்மேனியாவின் சுல்தானேட் அதன் எதிரிகளுக்கு எதிராக நைட்ரஸ் அமிலத்தைத் தயாரிப்பதில் தன்னிறைவு பெற்றதாக ஆகஸ்தோன் எழுதினார். சாம்ராஜ்யம், அதற்காக சில ஆலைகளை பல்வேறு பகுதிகளில் அமைத்திருந்தது, அவை மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அரசாங்க வீரர்களால் நிர்வகிக்கப்பட்டன.
சில பகுதிகளில், கிராமப்புறங்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு நைட்ரஸ் அமிலத்தின் உற்பத்தி ஒதுக்கப்பட்டது. இந்த வேலைக்கு மாற்றாக, வரிவிதிப்பிலிருந்து விலக்கு கிடைத்தது. இதேபோன்ற மேலாண்மை ஐரோப்பாவின் சாம்ராஜ்யங்களிலும் செய்யப்பட்டது என்று அவர் எழுதியுள்ளார்.
"சாம்ராஜ்யம், நைட்ரஸ் அமிலம் மற்றும் துப்பாக்கி உற்பத்தியில் 17 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தன்னிறைவு பெற்றிருந்தது. அப்போது அதன் வருடாந்திர தேவை 540 மெட்ரிக் டன் வரை இருந்தது. இருப்பினும், நைட்ரஸ் அமிலத்தில் தன்னிறைவு என்பது துப்பாக்கி உற்பத்தி மற்றும் அதன் இராணுவத் தேவையின் ஒரு பகுதி மட்டுமே என்றும் ராணுவத்தின் தேவைக்கு ஏற்ப, உற்பத்தியைச் செய்வது ஒரு பெரும் சவால் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உஸ்மானியா சாம்ராஜ்யத்திற்கு, சுவீடன், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினிலிருந்து துப்பாக்கியை வாங்க வேண்டியிருந்தபோது 18 ஆம் நூற்றாண்டில் பல காலம், வெடிபொருள் உற்பத்தியில் உஸ்மானி தன்னிறைவு பெற்றிருந்தது என்பதை வரலாற்று ஆவணங்கள் நிரூபிக்கின்றன. ஆயினும், வெடிகுண்டுகள் குறைவான காரணத்தால், ரஷ்யாவுடனான 1768-74 ஆம் ஆண்டு போரில் , முதன்முறையாகச் செயல்பாட்டு சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
"உஸ்மானி 17 ஆம் நூற்றாண்டில் 761-1037 மெட்ரிக் டன் வெடிபொருளை உற்பத்தி செய்ய முடியும், ஆனால் 18 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இந்த அளவு 169 மெட்ரிக் டன்களாக குறைந்தது."
1770 களின் பிற்பகுதியில், சுல்தானேட் ஐரோப்பாவிலிருந்து தேவையான வெடிமருந்துகளில் 50 சதவீதத்தை வாங்க வேண்டியிருந்தது என்று பல்வேறு ஆதாரங்களின் குறிப்புகளிலிருந்து ஆகஸ்தோன் கூறுகிறார். 1778 ஆம் ஆண்டில், ஸ்வீடனிலிருந்து 84600 கிலோ வெடிப்பொருள், வாங்கப்பட்டது. பின்னர் 1782 ஆம் ஆண்டில், 95485 கிலோ வெடிபொருள் இதே போல பெறப்பட்டது. 1783 ஆம் ஆண்டில், இங்கிலாந்திலிருந்து 39198 கிலோ வெடிபொருள் வாங்கப்பட்டது.. இதே ஆண்டு மிக அதிக அளவாக, , 133386 கிலோ கிராம் வெடிப்பொருள் ஸ்பெயினிலிருந்து வாங்கப்பட்டது."
இந்த விஷயங்கள் சுல்தான் மூன்றாவது சலீம் ஐ அடைந்தன. அவர் நிலைமையைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார். இந்த நடவடிக்கைகளில் நீரின் சக்தியால் இயங்கும் தொழிற்சாலைகளை நிறுவுவதும் அடங்கும். வெடிபொருள் தொழிற்சாலையுடன் நீர் தொட்டிகளும் கட்டப்பட்டன, இதனால் தீ ஏற்பட்டால் உடனடியாக அணைக்க முடியும்.
18வது நூறாண்டின் இறுதியில், உஸ்மான் சிப்பாய் மஹ்மூத் அஃபாண்டி கூறுகையில், "வெளிநாட்டுத் துப்பாக்கிக் குண்டுகளை நம்பியிருப்பது முடிந்துவிட்டது, எங்கள் கிடங்குகள் நிரம்பியுள்ளன, இராணுவ நடவடிக்கைகளுக்கு எங்களிடம் போதுமானது உள்ளது, அதை ஏற்றுமதி செய்யத் தொடங்கினோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.
உஸ்மானியா சாம்ராஜ்யத்தின் சரிவு எங்கிருந்து தொடங்கியது?
எல்லா பக்கங்களிலும் மில்லியன் கணக்கான சதுர கிலோமீட்டர் எல்லைகள் மற்றும் போர்க்களங்களில் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டிய பின்னர் உஸ்மானியா சாம்ராஜ்யத்தின் பிரச்சினை எங்கிருந்து தொடங்கியது? இதற்கு நேரடி பதில் எதுவும் இருக்க முடியாது, எந்த வரலாற்றாசிரியரும் அதை தெளிவுபடுத்த முடியாது.
'கன்ஸ் ஃபார் தி சுல்தான்' புத்தகத்தில் பல்வேறு வரலாற்றாசிரியர்களின் கூற்றுக்கள் உள்ளன. ஆகஸ்தோனின் கூற்றுப்படி, பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றமே மிக முக்கியமான காரணம். மத்தியதரைக்கடல் பகுதியில் பொதுவாக மோசமான பொருளாதார நிலைமைகள் இருந்ததால், இவ்வளவு பெரிய உற்பத்தித் துறையைப் பராமரிப்பது கடினமாக இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நேரத்தில், பொருளாதார மற்றும் நிர்வாகம் போன்ற சொற்கள் ஐரோப்பாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன, மேலும் இது அறிவியல் மற்றும் நிதித் துறையில் மிகவும் முன்னேறியது.
"உஸ்மானி மற்றும் ஐரோப்பாவின் போர் வடிவம் மாறியபோது, இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் பெற்றன. 1526 முதல் 1683 வரை ஐரோப்பாவில் இரண்டு பெரிய போர்கள் மட்டுமே நடந்தன. சுல்தானின் இராணுவம் பெரும்பாலும் முற்றுகைகளில் ஈடுபட்டிருந்தது. "
கடினமான பொருளாதார சூழலில், 18 ஆம் நூற்றாண்டில், அந்த நேரத்தில் பெரும் எதிரியாக இருந்த ரஷ்யாவுடனான போர், சாம்ராஜ்யத்திற்கு பெரும் பிரச்சனையை உருவாக்கியது.
இந்த நேரத்தில் இஸ்தான்புல்லின் அரச இரும்பாலைகளின் நிலை என்ன? 'கன்ஸ் ஃபார் தி சுல்தான்' புத்தகத்தில், 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை , நூற்றுக்கணக்கான பீரங்கிகளை உருவாக்கும் சக்தி அதனிடம் இருந்தது , அதன் மொத்த எடை இரண்டு லட்சம் கிலோ கிராம் வரை கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையான பிரச்சனை, வெடிப்பொருள் உற்பத்தி என்று கூறப்படுகிறது. இதன் உற்பத்தி 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளுடன் ஒப்பிடும்போது 15-30 சதவீதம் குறைந்துவிட்டது.
உஸ்மானி இராணுவத்தில், ஒழுக்கம் மற்றும் தொழில்நுட்ப குறைவும் இருந்தது என்று அக்கால ஐரோப்பிய மற்றும் உஸ்மானி பார்வையாளர்களை மேற்கோள் காட்டி ஆகஸ்தோன் குறிப்பிடுகிறார்.
அந்த பலவீனங்களைப் பற்றி சாம்ராஜ்யத்திற்குத் தெரியாதா, அவற்றை அகற்ற ஏன் முயற்சிகள் எடுக்கப்படவில்லை?இது குறித்து இந்த புத்தகத்தில், 1734 ஆம் ஆண்டின், ஒட்டோமான் ஆவணம் பற்றி கூறப்பட்டுள்ளது. இதில் 'புதிய அமைப்பு முறைக்கான சொற்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இதற்கு 'உஸ்மானி தலைமை' தயாராக இல்லை என்று ஆகஸ்தோன் சுட்டிக்காட்டுகிறார், ஏனெனில் இது 'சமூக கட்டமைப்பை' ஆபத்தில் ஆழ்த்தும் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால், ரஷ்யாவுடனான 1787-92 போருக்குப் பிறகு அவர்கள் இதை செய்ய முயன்றபோது, காலம் கடந்துவிட்டது .
உஸ்மானியா சாம்ராஜ்யத்தின் 28 வது சுல்தான் , மூன்றாம் சலீம் (1789-1807), ஒரு "மாதிரி ராணுவத்தை" உருவாக்க விரும்பினார். ஆனால், இந்த முயற்சிக்கு விலையாக, அவர் தனது உயிரைக் கொடுக்கவேண்டியிருந்தது.
(முற்றும்)
இதன் முதல் பாகத்தை படிக்க: துருக்கி ஓட்டமான் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும் - ஐரோப்பாவை வென்ற கதை
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












