இஸ்ரேல்: காருக்குள் உடலுறவு - சர்ச்சையில் சிக்கிய ஐ.நா அதிகாரி மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய நாடுகளின் சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் அதன் அதிகாரி உடலுறுவு வைத்துக் கொள்ளும் காணொளி வைரலாக பரவியதை அடுத்து, இது குறித்து விசாரிக்க ஐ.நா சபை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இந்த சம்பவமானது இஸ்ரேலில் நடந்துள்ளது. அந்த காணொளியில், சிவப்பு நிற உடை அணிந்த ஒரு பெண், ஒரு ஆணின் மீது அமர்ந்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளர் டுஜாரிக், “நாம் எதற்காக பேசுகிறோமோ, எதற்காக பணியாற்றுகிறோமோ, அவை அனைத்திற்கும் எதிரானது இது போன்ற செயல்.” என்று கூறி உள்ளார். இருவர் சம்மதத்துடன் நடந்த உடலுறவா அல்லது பணம் பரிமாறப்பட்டதா? என்ற கேள்விக்கு, “இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று கூறினார்.
“பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாவது துயரமானது”
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் "Justice For Jeyaraj And Fenix" என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, "காவல்துறையின் மிருகத்தனம் கொடூரமான குற்றம், பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாவது துயர்மிகுந்தது" என தெரிவித்துள்ளார்.
விரிவாகப் படிக்க: https://www.bbc.com/tamil/india-53189616
தமிழ்நாட்டில் ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தொடருமா?

பட மூலாதாரம், Getty Images
ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தொடருமா என்பது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை, மத்திய அரசின் அறிவுறுத்தலுக்குப் பிறகு முடிவுசெய்யப்படும் என தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.திருச்சியில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோய்ப் பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு சரியாகப் பின்பற்றுவதால், இங்கு கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்தார்.
விரிவாகப் படிக்க: https://www.bbc.com/tamil/india-53192639
கொரோனா வைரஸ்: தமிழகம், இந்தியா, சர்வதேச எண்ணிக்கை என்ன?
உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என கொரோனா வைரஸ் பரவல் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பக்கத்தில் தமிழகம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை என்ன என்பது குறித்த தகவல்களை அறியலாம்.
விரிவாகப் படிக்க: https://www.bbc.com/tamil/global-53167469
Fari and lovely பெயர் மாற்றம் - சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images
யூனிலீவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் `முகப் பொலிவு` க்ரீமான `ஃபேர் அண்ட் லவ்லி`யில் உள்ள ஃபேர் என்ற வார்த்தை நீக்கப்படும் என அந்நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த அறிவுப்பைப் பலர் வரவேற்றாலும், ஆர்வலர்கள் இது பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்கின்றனர்.
விரிவாகப் படிக்க: https://www.bbc.com/tamil/global-53191157
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












