கொரோனா பரவலுக்கு நடுவே இரண்டாம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தும் ரஷ்யா மற்றும் பிற செய்திகள்

செஞ்சேனையின் முக்கிய படைக்கலனாக விளங்கிய வின்டேஜ் டி-34 டேங்குகளை மாஸ்கோ வீதிகளில் இயக்கப்படுகிறது.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இரண்டாம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டம்: செஞ்சேனையின் முக்கிய படைக்கலனாக விளங்கிய வின்டேஜ் டி-34 டேங்குகளை மாஸ்கோ வீதிகளில் இயக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போர் வெற்றியை குறிக்கும் வகையில் மிகப் பெரிய ராணுவப் பேரணியை ரஷ்யா புதன்கிழமை நடத்துகிறது. மே 9ஆம் தேதி நடக்கவிருந்த இந்த பேரணியை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தள்ளிவைத்தார்.

இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகளை சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யாவை உள்ளடக்கியது) வீழ்த்தி 75 ஆண்டுகள் ஆகிறது. இந்தப் போரில் ஏறத்தாழ 2 கோடி சோவியத் ஒன்றிய வீரர்கள் பலியானார்கள். இந்தப் பேரணியை நடத்துவதற்காக கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த சமூக முடக்கத்தை ரஷ்யா இந்த மாதம் தளர்த்தியது. இந்த பேரணியில் இந்தியாவின் சார்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.

இந்தியா - சீனா எல்லை பதற்றம்: 'பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம்' - சீனா

india china border talks

பட மூலாதாரம், Getty Images

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே, மோல்டோவில் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும், அந்த பேச்சுவார்த்தை நேர்மறையான மற்றும் சுமூகமான ஒரு சூழலில் நடைபெற்றது என்றும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மோல்டோ இந்தியா - சீனா இடையிலான மெய்யான கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் சீன பகுதியில் உள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா வைரஸ் மருந்துகளை விற்க ஆயுஷ் அமைச்சகம் தடை

Coronil: Ministry of AYUSH prohibits propagation till Baba Ramdev's 'Corona drug' is investigated

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பதஞ்சலி நிறுவனத்தின் 'கொரோனில்' எனும் மருந்து கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் என்று பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.

கோவிட் -19 தொற்றை குணப்படுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து என பதஞ்சலி வெளியிட்ட மருந்திற்கு ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனம் செவ்வாயன்று, 'கொரோனில்' மற்றும் 'சுவாசரி' என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது.

விரிவாகப் படிக்க:

'கொரோனா வைரஸ் ஊரடங்கு பதின்ம வயதினர் மூளை வளர்ச்சியை பாதிக்க வாய்ப்பு'

பதின்ம வயதினர், தங்கள் நண்பர்களை நேரில் பார்க்க முடியாமல், பல மாதங்களாக வீட்டில் முடங்கி இருப்பதால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீண்டகால பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என நரம்பியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் அதிக நேரம் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவழிப்பதால், சக மனிதர்கள் உடனான கலந்துரையாடல் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த இடைவெளி பல மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்திய - சீன எல்லை பதற்றத்துக்கு நடுவே இந்தியாவில் முதலீடு செய்த சீன நிறுவனம்

கார்

பட மூலாதாரம், Getty

இந்திய - சீன எல்லையில் ஜூன் 16ம் தேதியில் இருந்து பதற்றம் அதிகரித்துள்ளது. அன்று மதியம் ''இந்திய - சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு'' என்ற செய்தி வெளிவந்தது.

இந்த செய்தி வெளிவந்த சில நிமிடங்களில், ''சீன மோட்டார் நிறுவனமான ஜி.டபிள்யூ.எம் மற்றும் மகாராஷ்டிர அரசாங்கத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது; 3000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க 100 கோடி டாலர்கள் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது,'' என்ற அறிவிப்பும் வெளியானது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: