Coronavirus News: களத்தில் இறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங் - மருத்துவமனை சென்று ஆய்வு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், AFP
கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிப்போட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், மிகவும் அரிதான நிகழ்வாக அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்று புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
முகமூடி அணிந்திருந்த ஷி ஜின்பிங், மருத்துவமனை மட்டுமின்றி, பெய்ஜிங்கில் உள்ள சமுதாய நலக் கூடம் ஒன்றிற்கும் சென்றார். அப்போது அவரது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
2002-2003ஆம் ஆண்டுகளில் சீனாவில் பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸை விட வீரியம் மிக்க கொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த சந்திப்பின்போது, கொரோனா வைரஸுக்கு எதிராக இன்னும் "தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று ஷி வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், Reuters
ஒவ்வொரு வாரமும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இதற்கு முன்பு வரை ஷி ஜின்பிங் பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்தார்.
கொரோனா வைரஸ் பரவலின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரில் இந்த புதிய வைரஸ் பரவல் குறித்து முதன்முதலில் தெரிவித்த மருத்துவர் ஒருவர் இதே வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சீன மக்களிடையே கோப அலைகளை தூண்டியது.
இதைத்தொடர்ந்து, "எங்களுக்கு பேச்சு சுதந்திரம் வேண்டும்" என்பன உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் சீனாவின் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகின. ஆனால், அவை உடனடியாக சீன அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்பட்டுவிட்டன.

மக்களவையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறன்

பட மூலாதாரம், Getty Images
"ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். இது போலதான் இந்திய பட்ஜெட்டுன் உள்ளது," என்று குறிப்பிட்டார் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்.
எல்.ஐ.சி முதல் நடிகர் விஜய் வரை பல விஷயங்களை குறிப்பிட்டு இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் பேசினார் தயாநிதி மாறன். அதன் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.
விரிவாக படிக்க: மக்களவையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறன்

4 ஆஸ்கர் விருதுகளை வென்ற பாராசைட் படத்தின் உண்மை களம் இதுதான்

பட மூலாதாரம், CJENM/BBC
கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களின் அங்கீகாரத்தை தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அகாடமி அவார்ட்ஸ் நிகழ்வில், நான்கு ஆஸ்கர் விருதுகளை பெற்று திரைப்பட ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது தென்கொரிய திரைப்படமான 'பாராசைட்'.
பாராசைட் திரைப்படம் வேண்டுமானால் கற்பனை கதையாக இருக்கலாம், ஆனால் அந்த படத்தில் மையப்படுத்தப்படும் வீடுகள் சோல் நகரத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது.
விரிவாக படிக்க: பாராசைட்: 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்தின் உண்மை களம் இதுதான்

"குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது" - கிரண்பேடி

பட மூலாதாரம், Getty Images
புதுச்சேரியின் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, நாடு முழுவதம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிறப்பு தீர்மானமானது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் வரும் 12ம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூடவுள்ளது.
விரிவாக படிக்க: புதுச்சேரி:”குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது” - கிரண்பேடி

கலங்கவைக்கும் மருத்துவப் பணிக்கு நடுவில் இதயங்களை இணைக்கும் கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், AFP
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் வைரஸ் தொற்று பரவுவது இப்போதுதான் மட்டுப்படத் தொடங்கியுள்ளது. ஆனாலும், சீனாவில் களத்தில் உள்ள நிலைமைகள் பற்றிய தகவல்கள் குறைவாகவே வெளியில் தெரிகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













