நில உரிமைக்காக போராடிய பூர்வகுடிகள் படுகொலை மற்றும் பிற செய்திகள்

நில உரிமைக்காக போராடிய பூர்வகுடிகள் படுகொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப் படம்)

நிகரகுவா நாட்டில் நில உரிமைக்காக போராடி வரும் பழங்குடியினரை ஆயுதமேந்தியவர்கள் தாக்கியதில் ஆறு பழங்குடியினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் கடத்தி செல்லப்பட்டதாகவும் மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கூறும் உள்ளூர் காவல்துறை, இதுவரை இரண்டு இறப்புகளை மட்டும் உறுதிசெய்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் நிலவும் குழப்பத்திற்கான காரணம் குறித்து தெளிவில்லை.

News image

நிகரகுவா நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள பாதுகாக்கப்பட்ட அடர் வனப்பகுதியில் வாழும் மாயக்னா பழங்குடியினரை மையமாக வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போசாவனஸ் உயிர்க்கோளக் காப்பகத்துக்குட்பட்ட இந்த பகுதிதான் பழங்குடி குழுக்களுக்கும் புதிய குடியேற்றவாசிகளுக்கும் இடையிலான நில மோதல்களின் மையமாக இருந்து வருகிறது.

தனது சமூகம் படிப்படியாக "அழிக்கப்பட்டு" வரும் நிலையில் இதை தடுப்பதற்கு அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று மாயக்னா பழங்குடிகளின் தலைவர் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டி இருந்தார்.

Presentational grey line

கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா?

கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா?

பட மூலாதாரம், Getty Images

சீனாவை மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் அச்சமடைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து எண்ணற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே அது எங்கிருந்து, எப்படி உருவானது? என்ற கேள்விக்கு தெளிவான பதில் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதுதொடர்பாக பல செய்திகள் இணையத்தில் உலாவி வருகின்றன. எனவே, கொரோனா வைரஸ் குறித்து தீவிரமாக பரவி வரும் இரண்டு விடயங்கள் குறித்த உண்மைத்தன்மையை பிபிசி தமிழ் ஆராய்ந்து.

Presentational grey line

திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் என்ன சிக்கல்?

திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் என்ன சிக்கல்?
படக்குறிப்பு, திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளி. (கோப்புப் படம்)

சாதாரணமாக ஒரு வெள்ளைத் தாளில் கணினி அச்சு செய்யப்பட்டு கம்பத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட 'ஆட்கள் தேவை' விளம்பரம் தற்போது திருப்பூர் தொழிலாளர் சந்தையில் பரபரப்பையும், திருப்பூர் பின்னலாடை தொழில் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிலை குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

காரணம், பேட்லாக் டைலர் தேவை என்று ஒரு குறுந்தொழிலகம் வெளியிட்ட அந்த விளம்பரத்தில், வேலைக்கு வருகிறவர்களுக்கு பகலிலும், இரவிலும் இலவசமாக மது வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததே இந்தப் பரபரப்புக்குக் காரணம்.

Presentational grey line

ஜாமியா மாணவரை துப்பாக்கியால் சுட்ட 'ராம பக்த கோபால்' யார்?

ஜாமியா மாணவரை துப்பாக்கியால் சுட்ட 'ராம பக்த கோபால்' யார்?

பட மூலாதாரம், Reuters

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, மகாத்மா காந்தியின் நினைவிடத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் கைது செய்யப்பட்டுள்ள நபர் தனது ஃபேஸ்புக் பதிவில் தம்மைத் தாமே 'ராம பக்தன்' என்று அழைத்துக்கொண்டுள்ளார்.

இடது கையில் சுடப்பட்ட ஷதாப் ஃபரூக் எனும் மாணவருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Presentational grey line

ரஜினி மீது வருமான வரி ஆவணங்களை வைத்து விமர்சனம்

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தன் பணத்தை வட்டிக்கு விட்டதாக வருமான வரித்துறை ஆவணங்களில் கூறியிருக்கும் தகவல்கள் வெளியான நிலையில், இதனை மையமாக வைத்து ட்விட்டரில் அவரது எதிர்ப்பாளர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் 2002 - 2005 ஆண்டு காலகட்டத்தில் வருமான வரியை சரியாகச் செலுத்தவில்லை என்று கூறி, மூன்று நிதியாண்டுகளுக்கும் சேர்த்து 66,22,436 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: