பதவி விலகிய பொலிவிய அதிபர் மொலாரஸுக்கு தஞ்சம் வழங்க முன்வரும் மெக்சிகோ மற்றும் செய்திகள்

பட மூலாதாரம், EPA
பொலிவியாவின் முன்னாள் அதிபர் ஏவோ மோராலஸுக்கு மெக்சிகோ அரசியல் தஞ்சம் வழங்க முன்வந்துள்ளது.
சர்ச்சைக்குரிய தேர்தலுக்கு எதிராக சில வாரங்களாக நடைபெறும் போராட்டங்களை தொடர்ந்து, தான் பதவியில் இருந்து விலகுவதாக மோராலஸ் அறிவித்த ஒரு நாளுக்கு பின்னர் மெக்ஸிகோவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மோராலஸ் இது பற்றி இன்னும் உறுதியாக எதையும் கூறவில்லை.
முன்னதாக, தன்னை பதவியில் இருந்து விலக கட்டாயப்படுத்திய "இருண்ட அதிகாரங்களை" எதிர்க்க வேண்டுமென அவர் தனது ஆதரவாளர்களிடம் வலியுறுத்தியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
காவல்துறையினரோடு இவரது ஆதரவாளர்கள் மோதி கொண்டதில் சுமார் 20 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பொலிவியாவின் அதிபராக பதவியேற்ற முதலாவது மண்ணின் மைந்தரான மோராலஸ் பதவி விலக வேண்டுமென அந்நாட்டின் படைத்தலைவர் வெளிப்படையாக அறிவித்த பின்னர், அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக மோராலஸ் அறிவித்தார்.
புதிய தேர்தல் நடைபெறும் வரை தற்காலிக அதிபராக செயல்பட இருப்பதாக சென்ட் அவையின் துணைத்தவைலர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
கோக்கோ விவசாயியான மோராலஸ் 2006ம் ஆண்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வறுமை ஒழிப்பு, பொலிவியாவின் பொருளாதா மேம்பாடு போன்ற செயல்பாடுகளால் இவர் பெரும் புகழ்பெற்றார்.
ஆனால், அரசியல் சாசன விதிகளுகளுக்கு முரணாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நான்காவது முறையாக அதிபர் பதவிக்கு மோராலஸ் போட்டியிட்டது பெரும் சர்ச்சையானது. இந்த தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

"அயோத்தி வழக்கில் ஆதாரங்களுக்கு மாற்றாக தொன்மங்கள் அடிப்படையில் தீர்ப்பு" - பேராசிரியர் கருணானந்தன்

அயோத்தி நிலத்தகராறு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அறிவியல் ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக விமர்சிக்கிறார் வரலாற்று பேராசிரியர் கருணானந்தன். வரலாற்று ரீதியான இந்த வழக்கில் தொன்ம கதைகளை கொண்டு தீர்ப்பளித்ததை ஒப்புக்கொள்ளமுடியவில்லை என்கிறார் அவர்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது சிவசேனை; கால அவகாசம் வழங்க மறுத்தார் ஆளுநர்

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிவித்துவிட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் சிவசேனை அரசாங்கம் அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
"காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில், எங்களுக்கு ஆட்சி அமைக்கக் கோருவதற்கு உரிமை உள்ளது. ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளோம். குறைந்தது இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டோம். ஆனால், எங்களுக்கு கால அவகாசம் தரப்படவில்லை. ஆட்சி அமைக்க எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வோம்" என்று ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரேவின் மகனும், சட்டமன்ற உறுபிப்பினருமான ஆதித்ய தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற சிவசேனை தலைவர்கள், ஆளுநரை நேரில் சென்று சந்தித்தனர்.
விரிவாக வாசிக்க: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது சிவசேனை; கால அவகாசம் வழங்க மறுத்தார் ஆளுநர்

"தமிழர்களுடன் பொங்கல் சாப்பிட்ட சிறிசேன, தமிழர்களுக்கு எதிராகவே மாறினார்"

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் 2005ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்வீடன் நாட்டை ச் சேர்ந்த பெண் ஒருவரின் கொலை வழக்கின் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னணியில், அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தது, தமிழர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இந்த சமயத்தில் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாக தமிழர்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

டி.என்.சேஷன்: அரசியல்வாதிகளின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவரின் வெளிவராத சுயசரிதை

இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ஞாயிறன்று இரவு 9.30 மணியளவில் சென்னையில் தன்னுடைய வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
1955ஆம் ஆண்டு பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான டி. என். சேஷன், 1990ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் பல தேர்தல் திருத்தங்களைக் கொண்டுவந்தவர் சேஷன்..
விரிவாக வாசிக்க: அரசியல்வாதிகளின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சேஷனின் வெளிவராத சுயசரிதை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












