அமெரிக்க ராணுவ முகாம் மீது சோமாலியாவில் தாக்குதல் - அல்-ஷபாப் காரணமா?

பட மூலாதாரம், Alamy
சோமாலியாவில் அமெரிக்க கமாண்டோ படையினர் பயிற்சியெடுத்துவரும் ஒரு ராணுவ முகாம் மீது ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சோமாலியாவின் தெற்கு ஷபேல் பகுதியில் உள்ள பாலேடோக்லே விமானநிலையத்தில் பல குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக தெரிவித்த அல்-ஷபாப் தீவிரவாத குழு, ராணுவ முகாமின் கதவுகளை கார் வெடிகுண்டு மூலம் தகர்த்தாகவும், அதன்பின்னர் தனது போராளிகளை முகாம் உள்ளே அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்த இடத்திலிருந்து ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
''மிகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட ராணுவ முகாமின் உள்ளே தடைகளை தகர்த்து புனித போராளிகள் நுழைந்தனர். மிகவும் தீவிரமாக நடந்த துப்பாக்கி சண்டையில் அவர்கள் ஈடுபட்டனர்'' என்று அல்-ஷபாப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோமாலியா தலைநகரான மொகதீஷுவின் மேற்கு பகுதியில் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ராணுவ முகாம், அமெரிக்க சிறப்பு படைகள், சோமாலியா படையினர் மற்றும் உகாண்டா அமைதிபடையினர் ஆகியோரின் தளமாக இந்த ராணுவ முகாம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி முகமாகவும், டிரோன்களை ஏவும் தளமாகவும் இந்த ராணுவ முகாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தங்களின் கூட்டு வான்வழி தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக அண்மைய காலங்களில் மொகதீஷுவில் பதில் தாக்குதல்களை அல்-ஷபாப் நடத்துவதாக சோமாலியா கூறுகிறது.

Kashmir ஊடுருவி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது - Malaysian PM Mahathir speech in UN General Assembly
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:
- #gobackmodi: நரேந்திர மோதி கிளம்பிய பிறகும் உலகளவில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
- காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது: ஐ.நா.வில் மலேசிய பிரதமர் பேச்சு
- கர்தார்பூர் குருத்வாரா நுழைவிட திறப்புவிழா: மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் அழைப்பு
- தர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது குறித்து அவர் நண்பர்கள் கூறுவது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












