பாகிஸ்தான் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு: கர்தார்பூர் குருத்வாரா நுழைவிட திறப்புவிழா

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் உள்ள குருத்வாராவில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் சென்று வழிபட, இருநாடுகளின் எல்லையில் அமைக்கப்படும் புதிய சாலை மற்றும் நுழைவிட திறப்புவிழா நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இது குறித்து கூறுகையில், கர்தார்பூர் நுழைவிட திறப்புவிழாவுக்கு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் சீக்கிய மதத்தின் பிரதிநிதியாக உள்ளார். அவருக்கும் நாங்கள் முறையாக அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின்போது, சீக்கியர்களில் பெரும்பான்மையினர் இந்தியாவில் உள்ள பஞ்சாபில் வசித்தனர்.

கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் உள்ளது. சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தனது கடைசி 18 ஆண்டுகளை இங்குதான் கழித்தார்.
1947க்கு பிறகு மூன்று போர்களில் ஈடுபட்டுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உறவில் உண்டாகியுள்ள ஒரு முன்னேற்றமாகவே இது பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தங்கள் எல்லைக்குள் அமையவிருக்கும் சாலைக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்ளவதாக இரு நாடுகளும் கூறியுள்ளன.

காந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:
- உத்தரப்பிரதேசம், பிகாரில் கடும்மழை வெள்ளம்: உயிரிழப்புகள் 100-ஐ தாண்டியது
- காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது: ஐ.நா.வில் மலேசிய பிரதமர் பேச்சு
- 'மனித உரிமை' பெற்ற ஒராங்குட்டான் விலங்கு காட்சியகத்தில் இருந்து விடுதலை
- நினைத்துப் பார்க்க முடியாத அளவு கச்சா எண்ணெய் விலை உயரும்: சௌதி இளவரசர்
- உலகின் தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












