விமானப் பயணத்தில் குழந்தைகளின் குறும்பில் இருந்து தப்பிக்க உதவும் நிறுவனம்

பட மூலாதாரம், ANDREY POPOV
நெடுந்தூர விமானப் பயணங்களின்போது இளம் குழந்தைகள் தங்கள் அருகே அமர்ந்து பயணிப்பதை சில பயணிகள் விரும்ப மாட்டார்கள்.
காரணம், அந்தக் குழந்தைகள் சுட்டித்தனம் செய்தாலோ, அழத் தொடங்கிவிட்டாலோ அதை அவர்கள் தொந்தரவாகக் கருதலாம்.
இத்தகைய பயணிகள் மனம் மகிழும் வகையில் ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது 'ஜப்பான் ஏர்லைன்ஸ்' விமானப் போக்குவரத்து நிறுவனம்.
இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுடன் அமர்ந்து பெரியவர்கள் பயணிக்கவுள்ள இருக்கைகளில், குழந்தைகள் முகத்தின் சின்னத்தை சேர்க்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதை மற்ற பயணிகள் இணையதள முன்பதிவின்போது பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அவர்கள் விரும்பினால், அதற்கு அருகில் உள்ள இருக்கைகளைத் தவிர்க்கலாம்.
எனினும், இது 100% பலன் அளிக்கும் என்று உத்தரவாதமாகக் கூற முடியாது என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடைசி நேரத்தில் பறக்க இருந்த விமானத்துக்கு பதிலாக வேறு விமானம் மாற்றப்பட்டாலோ, விமான நிறுவனத்தின் மூலம் நேரடியாக முன்பதிவு செய்யாமல் வேறு இணையதளங்கள் அல்லது செயலிகள் மூலம் முன்பதிவு செய்தாலோ, அவர்களுடன் இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகள் பயணிப்பது தங்களுக்குத் தெரியாமல் போகலாம் என்பதாலும் ஒரு குறிப்பிட்ட இருக்கையில் குழந்தைகள் இருப்பதை தங்களால் நிச்சயமாக முன்கூட்டிய தெரியப்படுத்த இயலாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் சில விமானப் பயணிகள் இதை வரவேற்றுள்ளனர். தாங்கள் அடிக்கடி பயணிக்கும் விமான நிறுவனங்கள் இதையே பின்பற்ற வேண்டும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
வேறு சிலரோ குழந்தைகளின் செயல்பாடுகளை பொறுத்துக்கொண்டு பயணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












