இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் இப்படிதான் இருந்தான் மற்றும் பிற செய்திகள்

'ஆப்ரிக்காவுக்கு வெளியே'
ஆப்ரிக்காவுக்கு வெளியே நவீன மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிரீஸில் கண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த எச்சங்கள் 210,000 ஆண்டுகளுக்கு முந்தியவை. அந்த சமயத்தில் ஐரோப்பா நியாண்டர்தால் மக்களால் நிரம்பி இருந்தது. ஆப்ரிக்காவிலிருந்து மனிதர்கள் வெளியிடங்களில் குடியேறினார்கள் என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது. ஆனால், அந்த தடயங்கள் எதுவும் இப்போதைய மனிதர்களிடம் இல்லை. இந்த ஆய்வு முடிவு நேச்சர் சஞ்சிகையில் பிரசுரமாகி உள்ளது.

'நான் அரைகுறை கிரிக்கெட் வீரனல்ல'

பட மூலாதாரம், OLI SCARFF/AFP/GETTY IMAGES
2019 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டபோது ஓவ்வொரு வீரரும் எந்த தகுதியில் தேர்வு செய்யப்பட்டனர் என்ற விவாதம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் மத்தியில் எழுந்தது. மற்ற வீரர்களின் தேர்வு குறித்து வெவ்வேறு கருத்துகள், மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், ஒரு வீரரின் தேர்வு குறித்து ஒருமித்த கருத்தே நிலவியது. அது ரவீந்திர ஜடேஜாவின் தேர்வுதான்.

ஏன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறமுடியவில்லை?

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
18 ரன்களில் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி. இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 240 ரன்கள் எனும் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்ய முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி.இந்தியா அணியின் மூன்று தொடக்க வீரர்களும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர்.

டிரம்பை கடுமையாக விமர்சித்திருந்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் ராஜிநாமா

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்திருந்த இமெயில்கள் வெளியில் கசிந்த விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் சர் கிம் டாரக் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தன்னுடைய இமெயிலில் 'அமெரிக்கா அதிபரின் ஆட்சி குழப்பம் மிக்கதாகவும் திறமையற்றதாகவும்' இருக்கிறது என கூறிய பிறகு அவரை 'அறிவில்லாதவர்' என டிரம்ப் தெரிவித்திருந்தார். கிம்மின் ராஜினாமா வருத்தம் அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

குஜராத்தில் காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் காவல் அதிகாரி முன் வெட்டிக் கொலை

பட மூலாதாரம், SOLANKI FAMILY
அஹமதாபாத் கிராமத்துக்கு அருகே உள்ள மண்டல் கிராமத்தில் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த தலித் ஒருவர், காவல்துறை அதிகாரிகளுக்கு முன்பாகவே கொலை செய்யப்பட்டுள்ளார்.25 வயதான ஹரேஷ் சோலங்கி, இரண்டு மாத கர்ப்பமான தனது மனைவி ஊர்மிளா ஜாலாவை, அவரது தாய் வீட்டில் இருந்து அழைத்து வர சென்றார். அவர் செல்லும்போது மாநில பெண்கள் உதவி ஆலோசகர் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது காரில் ஆயுதங்கள் ஏந்திய எட்டு நபர்கள் வந்து தாக்கியதில் ஹரேஷ் உயிரிழந்தார்.அந்த கான்ஸ்டபிளுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
விரிவாகப் படிக்க:குஜராத்தில் காவல் அதிகாரி முன் தலித் இளைஞர் வெட்டிக் கொலை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












