டிரம்பை கடுமையாக விமர்சித்திருந்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் ராஜிநாமா

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்திருந்த இமெயில்கள் வெளியில் கசிந்த விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் சர் கிம் டாரக் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தன்னுடைய இமெயிலில் ’அமெரிக்கா அதிபரின் ஆட்சி குழப்பம் மிக்கதாகவும் திறமையற்றதாகவும்’ இருக்கிறது என கூறிய பிறகு அவரை ’அறிவில்லாதவர்’ என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
கிம்மின் ராஜினாமா வருத்தம் அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.
தன்னுடைய பதவியின் நிலையற்றத்தன்மையை சரி செய்ய விரும்பியதாக கூறிய கிம், இமெயில் கசிவுக்குப்பின் அது சாத்தியமில்லாமல் போனது எனக் கூறினார்.
”என்னுடைய பதவிக்காலம் இந்த வருடத்தின் இறுதி வரை இருந்தாலும் இப்போது இருக்கும் தருணத்தில் புதிய தூதரை நியமிக்க அனுமதிப்பதே சிறந்தது என நான் நம்புகிறேன்” என வெளியுறவு அலுவலகத்திற்கு தான் எழுதிய கடிதத்தில் குறிபிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
சர் கிம்முடன் இனி தொடர்ந்து பணிபுரிய விருப்பம் இல்லை என டிரம்ப் தெரிவித்திருந்தார். முதல்முறையாக பிரிட்டன் தூதருடன் ஒரு நாட்டின் அதிபர் பணிபுரிய மறுத்தது இதுவே முதல் முறை என நாடாளுமன்ற வெளியுறவு விவகார கமிட்டியிடம் ராஜரீக சேவையின் தலைவர் சைமன் கூறியிருந்தார்.
ராஜினாமா செய்தவுடன் இந்த கடினமான நாட்களில் தனக்கு ஆதரவு அளித்த இரு நாட்டினருக்கும் தன்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொண்டார் கிம்.
பிரிட்டன் தூதரின் இமெயில்கள் ஞாயிறன்று `மெயில்` ஊடகத்தில் வெளியானது அதில் டிரம்ப் மற்றும் அவரின் நிர்வாகத்தை சர் கிம், கடுமையாக விமர்சித்திருந்தார்.
வெள்ளை மாளிகை "குழப்பமானதாகவும் திறனற்றதாகவும்" உள்ளது என அதில் தெரிவித்திருந்தார்.
சர் கிம்மின் இமெயில் வெளியானது குறித்து டிரம்ப், "நாங்கள் அவரின் பெரிய ரசிகர் இல்லை. அவர் பிரிட்டனுக்கு ஒழுங்காக பணியாற்றவும் இல்லை" என தெரிவித்தார்.
மேலும் அடுக்கடுக்கான பல ட்விட்டுகளில் தெரீசா மே மற்றும் பிரெக்ஸிட்டையும் விமர்சித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












