அமெரிக்கா - இரான் இடையே தீவிரமாகும் மோதல் மற்றும் பிற செய்திகள்

அமெரிக்கா - இரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் அதிபர் ஹசன் ரூஹானி

இரான் மீது கூடுதலாக தடைகள்

இரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் நீடித்து வரும் சூழலில், இரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்கும் நோக்கில் அந்நாட்டின் மீது கூடுதலாக தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தங்கள் அணு ஆயுத திட்டத்தை பன்னாட்டு சமூகத்திடம் ஒப்புக்கொண்ட அளவைவிட அதிகரிக்கப்போவதாக இரான் கூறியுள்ளதன் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரான் தன் வசம் கையிருப்பு வைத்துக்கொள்ளும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவில் உச்சபட்ச அளவை வைத்துகொள்ள 2015இல் இரான் ஒப்புக்கொண்டபின், எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்ட தடைகள் நீக்கப்பட்டன.

அமெரிக்கா - இரான்

பட மூலாதாரம், Getty Images

இது அமெரிக்காவுக்கு பாதகமான நடவடிக்கை என்று கூறி டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு விலகினார். இதனால் அணு ஆயுத கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தாம் அளித்த உத்தரவாதங்களில் இருந்து இரான் விலகி வருகிறது.

வியாழனன்று இரானிய படைகளால் அமெரிக்காவின் ஆளில்லா ராணுவ விமானம் ஒன்று ஹோர்முஸ் ஜலசந்தியில் சுட்டு வீழ்த்தப்பட்டது சமீபத்திய மோதலைத் தீவிரமாக்கியது.

Presentational grey line
முகாம்களில் உள்ளவர்கள் இப்போது சீர்திருத்தமாகும் பாதையில் இருக்கிறார்கள் என்கிறது சீனா.

சீனாவின் கட்டாய முகாம்களில் இருக்கும் முஸ்லிம்களின் நிலை

சீனாவில் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் பல லட்சம் முஸ்லிம் வீகர் இன மக்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்து வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணை ஏதுமின்றி முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதாக மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.

ஆனால் ''தீவிரவாதத்தை'' தடுக்கும் மையங்களில் வீகர் இன முஸ்லிம்கள் தாங்களாக முன்வந்து கலந்து கொள்வதாக சீனா கூறுகிறது. அவற்றில் ஒரு மையத்துக்குள் பிபிசி சென்று ஆய்வு செய்தது.

Presentational grey line
இலங்கையில் அரசாங்கத்தால் கற்பிக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத கொள்கைகள்

இலங்கை பாடத்திட்டத்தில் தீவிரவாத கொள்கைகள்

இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கான தண்டனை கொலை என்று இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாடசாலை இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து, பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என இலங்கை கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

Presentational grey line
IND Vs AFG

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

உலகக்கோப்பை தொடரில் இன்று சவுதாம்ப்டனில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில், ஐந்து விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது.

போட்டியின் கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆப்கானிஸ்தான் அணி போட்டியில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

Presentational grey line
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

`மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி`

நாளுக்கு நாள் தனியார் தண்ணீர் டேங்குகளில் விற்கப்படும் தண்ணீரின் விலை கூடிக் கொண்டே போகிறது. வியாழக்கிழமை மாலை பெய்த மழை தொடரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மழை பெய்யவில்லை.

இருக்கின்ற தண்ணீர் எத்தனை நாட்களுக்கு வரும் என்று தெரியாத நிலையில் இந்த சிக்கல்களில் இருந்து சென்னை எப்படி மீண்டெழும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :