நன்றி!
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை போட்டி குறித்த நடப்புகளை நேரலையாக பிபிசி தமிழுடன் இணைந்திருந்து அறிந்ததற்கு நன்றி! இரவு வணக்கம்!
கிரிக்கெட் உலக்கோப்பை தொடரின் ரவுண்ட் ராபின் சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது. இதுவரை விளையாடியுள்ள ஐந்து ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை போட்டி குறித்த நடப்புகளை நேரலையாக பிபிசி தமிழுடன் இணைந்திருந்து அறிந்ததற்கு நன்றி! இரவு வணக்கம்!
உலகக்கோப்பை தொடரில் இன்று சவுதாம்ப்டனில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில், ஐந்து விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது.
அதைத்தொடர்ந்து, 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் நிதான ஆட்டத்தையும், பின்பு அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்தினாலும், சீரான இடைவேளையில் அதன் விக்கெட்டுகள் சரிந்தன.
போட்டியின் கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆப்கானிஸ்தான் அணி போட்டியில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
கடைசி ஓவரின் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் நபி, அலாம் மற்றும் ரஹ்மானை அடுத்தடுத்து போல்டாக்கி இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷமி ஹாட்ரிக் எடுத்தார்.
ஷமி வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஆப்கானிஸ்தான் அதிரடி வீரர் நபி கேட்சானார்.
அவர் 55 பந்துகளில் 52 ரன்கள் அடித்திருந்தபோது அவுட்டானார்.
ஆப்கானிஸ்தான் அணி மீதமுள்ள 6 பந்துகளில் 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.
49 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் நபி 48 ரன்களுடனும், கில் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஒரு ஓவருக்கு ஆப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அந்த அணியின் தற்போதைய ரன் ரேட் 4.27ஆக உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி மீதமுள்ள 12 பந்துகளில் 21 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.
48 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் நபி 44 ரன்களுடனும், கில் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஒரு ஓவருக்கு ஆப்கானிஸ்தான் அணி 10.5 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அந்த அணியின் தற்போதைய ரன் ரேட் 4.25ஆக உள்ளது.
பும்ரா வீசிய 46ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் நபி, இந்த போட்டியின் முதல் சிக்சரை விளாசினார்.
போட்டியில் இன்னும் 18 பந்துகள் எஞ்சியுள்ள நிலையில், 24 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறும் நிலையில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது.
சாஹல் வீசிய 45ஆவது ஓவரின் நான்காவது பந்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை விக்கெட் கீப்பர் தோனி ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார்.
தற்போது 26 பந்துகளில் ஆப்கானிஸ்தானுக்கு 35 ரன்கள் தேவை.
ஆப்கானிஸ்தான் அணி மீதமுள்ள 30 பந்துகளில் 40 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.
45 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி எடுத்துள்ளது.
ஒரு ஓவருக்கு ஆப்கானிஸ்தான் அணி 8.00 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அந்த அணியின் தற்போதைய ரன் ரேட் 4.11ஆக உள்ளது.
தனது கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லாஹ் சட்ரானை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.
சட்ரான் தூக்கி அடித்த பந்தை சாஹல் எளிதாக பிடித்துவிட்டார்.
42 ஓவர்களில் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு ஆப்கானிஸ்தான் அணி 169 ரன்கள் அடித்துள்ளது.
அதாவது, அடுத்த 48 பந்துகளில் 54 ரன்களை எடுத்தால் வெற்றி எனும் நிலையில் ஆப்கானிஸ்தான் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி மீதமுள்ள 54 பந்துகளில் 60 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.
அதுமட்டுமின்றி, அந்த அணியின் கைவசம் ஐந்து விக்கெட்டுகள் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
40 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் நபி 25 ரன்களுடனும், நஜிபுல்லாஹ் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஒரு ஓவருக்கு ஆப்கானிஸ்தான் அணி 6.80 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அந்த அணியின் தற்போதைய ரன் ரேட் 3.93ஆக உள்ளது.
34ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ஆஃப்கனை இந்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹல் போல்டாக்கினார்.
அடுத்ததாக, சட்ரான் களமிறங்கியுள்ளார்.
எனவே, 35 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி எடுத்துள்ளது.
30 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி எடுத்துள்ளது.
ஒரு ஓவருக்கு ஆப்கானிஸ்தான் அணி 5.90 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அந்த அணியின் தற்போதைய ரன் ரேட் 3.57ஆக உள்ளது.
இந்திய அணியின் நேர்த்தியான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகின்றனர்.
அதாவது, 28ஆவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை ரஹ்மத் ஷா தூக்கி அடிக்க, யுஸ்வேந்திரா சாஹல் கேட்ச் பிடித்துவிட்டார்.
பிறகு, அடுத்த பந்திலேயே ஷாஹிடியை போல்டாக்கினார் பும்ரா. இவ்வாறாக, இரண்டு விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images
இருபது ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி எடுத்துள்ளது.
ஒரு ஓவருக்கு ஆப்கானிஸ்தான் அணி 5.14 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அந்த அணியின் தற்போதைய ரன் ரேட் 3.55ஆக உள்ளது.
இந்திய வீரர் முகமது ஹர்திக் பாண்டியா வீசிய பதினோராவது ஓவரின் கடைசி பந்தை ஆப்கானிஸ்தான் வீரர் நைப் தூக்கி அடிக்க, அதை விஜய் சங்கர் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.
42 பந்துகளை எதிர்கொண்ட நைப் 27 ரன்களை எடுத்திருந்தபோது அவுட்டானார்.
அடுத்ததாக ஷஹிடி களமிறங்கியுள்ளார்.
17 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 66 ரன்களுடன் ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது.
ஹர்திக் பாண்டியா வீசிய 11ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் உள்பட 12 ரன்களை ஆப்கானிஸ்தான் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் வீரர் ஜி. நைப் மட்டும் பதினோரு ரன்களை குவித்தார்.
இதன் மூலம் அந்த அணியின் ரன் ரேட் 4.50ஆக உயர்ந்துள்ளது.
பத்து ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி எடுத்துள்ளது.
ஒரு ஓவருக்கு ஆப்கானிஸ்தான் அணி 4.70 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அந்த அணியின் தற்போதைய ரன் ரேட் 3.60ஆக உள்ளது.
ஆறாவது ஓவரின் மூன்றாவது பந்தை வீசிய இந்திய வீரர் முகமது ஷமி, ஆப்கானிஸ்தான் வீரர் சசாயை போல்டாக்கினார்.
24 பந்துகளை எதிர்கொண்ட சசாய் 10 ரன்களை எடுத்திருந்தபோது அவுட்டானார்.
அடுத்ததாக ரஹ்மத் ஷா களமிறங்கியுள்ளார்.
6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இருபது ரன்களுடன் ஆப்கானிஸ்தான் ஆடி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images