ஹோலி: இந்தியா, நேபாளத்திலுள்ள இந்துக்கள் கொண்டாடும் வண்ணங்களின் திருவிழா
ஹோலி பண்டிகை பெரும்பாலும் இந்தியாவிலும், நேபாளத்திலும் கொண்டாடப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters
ஹோலி பண்டிகை வசந்தகாலத்தின் தொடக்கத்தை இது குறிக்கிறது.

பட மூலாதாரம், Reuters
புதிய தொடக்கத்தை இது அடையாளப்படுத்துகிறது.

பட மூலாதாரம், Reuters
பௌர்ணமி நாளன்று ஹோலி பண்டிகை வருகிறது.

பட மூலாதாரம், EPA
ஹோலி பண்டிகை நாளன்று, நீரையும், வண்ணப் பொடிகளையும் மக்கள் ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்கின்றனர். தீமையைின் மீது நன்மை வெற்றி கொள்வதை அடையாளப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் சுற்றி அமைந்திருக்கும் தீயை ஏற்றி மகிழ்கிறார்கள்.

பட மூலாதாரம், Google
இந்த வண்ணப்பொடிகள் ஒவ்வொன்றும் வேறுபட்ட பொருளை தருகின்றன. சிவப்பு வண்ணம் அன்பையும், செழுமையையும் குறிக்கிறது. மஞ்சள் நிறம் மஞ்சள் கிழங்கைக் குறிக்கிறது. நீல நிறம் கிருஷ்ணனை குறிக்கிறது. பச்சை நிறம் புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது.

பட மூலாதாரம், Reuters
பாரம்பரியமாக, மஞ்சள் உள்பட செடிகளில் இருந்து இந்த பொடிகள் தயாரிக்கப்பட்டதற்குப் பதிலாக செயற்கை நிறமிகள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.

பட மூலாதாரம், EPA
இந்த கொண்டாட்டங்களில், நிறங்களை பூசிக்கொண்ட மக்கள் கூட்டத்தை பார்க்கலாம்.

பிபிசி டெல்லியில் ஹோலி கொண்டாட்டம்

பட மூலாதாரம், Reuters
இந்தியாவோடு, அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் வாழும் நேபாளத்தில் ஹோலி கொண்டாடப்படுகிறது. காத்மண்டில் நடைபெற்ற கொண்டாட்டம். பிரிட்டன் உள்பட மேலும் சில நாடுகளிலும் ஹோலி பிரபலமாகியுள்ளது.

பட மூலாதாரம், EPA
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












