தமிழர் குரல்: சென்னையில் பிபிசி தமிழின் 'தேர்தல் சிறப்பு' நிகழ்ச்சி

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி பிபிசி தமிழ் சார்பில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் "தமிழர் குரல்" என்ற பெயரில் தேர்தல் சிறப்பு நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலை ஒட்டி, பிபிசி இந்தியா முழுவதும் வெவ்வேறு மொழிச் சேவைகளின் மூலம் 'டவுன் ஹால்' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பங்கேற்று மாணவ - மாணவிகளுடன் உரையாடுகிறார்கள்.

பட மூலாதாரம், Facebook
இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்தத் தேர்தலில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், ஜனநாயகம் குறித்த அவர்களுடைய கருத்து என்ன என்பவற்றை வெளிப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
இதில் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்டுள்ள மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள், மற்ற பிரபலங்களிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பும் அளிக்கப்படும்.
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜிஆர்டி கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி 'தமிழர் குரல்' என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், முன்னாள் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் டி,எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி தொடர்புடைய செய்திகள் பிபிசி தமிழ் இணைய தளத்தில் வெளியாகும். பிபிசி தமிழின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களிலும் இந்த செய்திகள் #தமிழர்குரல் என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்படும்.
இந்த நிகழ்வில் பங்கேற்கும் தலைவர்களிடம் கேட்பதற்கான கேள்விகளை நேயர்களும் அனுப்பலாம். தற்போது இந்த செய்தி பகிரப்படும் ஃபேஸ்புக், டிவிட்டர் பதிவுகளின் கீழ் நேயர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவிடலாம்.
பிற செய்திகள்:
- தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு: அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை
- நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்க பாகிஸ்தானில் தேவாலயம் எரிக்கப்பட்டதா?
- பொள்ளாச்சி பாலியல் தாக்குதல்: “இருநூறு ஆண்டுகளாக தொடரும் துயரம்”
- கடத்தப்பட்டு, கொளுத்தப்பட்ட பள்ளி குழந்தைகள் பேருந்து: 51 குழந்தைகள் உயிர் தப்பியது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












