ஒரு நரியை கொல்ல ஒன்று சேர்ந்த 3,000 கோழிகள்

பட மூலாதாரம், Joern Pollex
வட மேற்கு பிரான்சில் ஒரு பண்ணையில், கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு நரியை கொன்றுவிட்டன.
பிரிட்டானியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு இளம் நரி, கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது.
பொதுவாக மூவாயிரம் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பண்ணையின் கூண்டுக்குள் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
நரி உள்ளே நுழைந்தபிறகு கதவுகள் மூடிக்கொண்டன. கோழிகளிடம் சிக்கிய அந்த இளம் நரி அங்கே தனது உயிரைவிட்டது.
கோழிகளிடம் அப்போது ஏற்பட்ட கூட்டு மந்தையுணர்வால் அவை அந்த நரியை குத்திக் கொன்றிருக்கின்றன என்கிறார் கிராஸ் சீன் விவசாய பள்ளியின் துறை தலைவர் பாஸ்கல் டேனியல்.
அந்த நரியின் உடல் அடுத்தநாள் கோழிக் கூண்டு பகுதியின் மூலையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
''அக்கோழிகள் நரியின் கழுத்தில் கொத்தியுள்ளன. நரியின் கழுத்தில் அந்த காயங்கள் தெரிந்தது,'' என ஏ எஃப் பி செய்தி முகமையிடம் டேனியல் கூறியுள்ளார்.
ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த கோழிப் பண்ணையில் அதிகபட்சம் ஆறாயிரம் பிரீ ரேஞ்ச் கோழிகள் அடைத்து வைக்கப்படலாம்.
கோழிகள் பகல் பொழுதில் கூண்டில் அடைத்து வைக்கப்படாமல் வெளியே நேரத்தை செலவிடும். இரவில் மீண்டும் அந்த பெரிய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்படும். பகல் பொழுதில் கூண்டின் கதவுகள் திறந்தே இருக்கும்.
நரி உள்ளே சிக்கிய பிறகு கோழிகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் கூட்டமாக உள்ளே நுழைந்ததை பார்த்து பயந்து போயிருக்கக்கூடும் என உள்ளூர் பிராந்திய செய்தித்தாளான குவெஸ்ட் பிரான்ஸிடம் டேனியல் தெரிவித்திருக்கிறார்.
"சிறையில் இருக்கும் 7 தமிழர்கள் மீது எனக்கு கோபம் இல்லை" - ராகுல் காந்தி
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்