பணிக்கு வருகிறீர்களா? - வந்தால் இந்த தீவுக்கு நீங்கள்தான் ராஜா: ஆச்சரிய தகவல்

பட மூலாதாரம், KEVIN LAJOIE/AERIALI
வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற வகையா நீங்கள்? - அப்படியானால் இந்த தீவின் பாதுகாவலர் பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள், தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த தீவே உங்களுக்குதான் சொந்தம்.
அந்த தீவு லியோதான்.
லியோ தீவு பிரிட்டனுக்கும், பிரான்ஸூக்கும் மத்தியில் அமைந்திருக்கும் சிறு தீவு.
இந்த தீவின் பரப்பளவு 38 ஏக்கர்தான்.
இங்கு மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. சூழலியல் ரீதியாக மிக முக்கியமான ஈர நிலப்பகுதி இது.
'பணியாளர்கள் தேவை'
இயற்கையான நீச்சல் குளம் அமைந்துள்ள இந்த தீவை பார்த்து கொள்ள பணியாளர்கள் தேவை.

பட மூலாதாரம், GUY BROWN
அடலாண்டிக் பெருங்கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த தீவில் ஒரே ஒரு வீடு மட்டும் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட பணியாளர்கள் அந்த வீட்டையும் பராமரிக்க வேண்டும். வன உயிர்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குர்ன்ஸி பகுதியிலிருந்து வருபவர்களுக்குதான் இங்கு பணி வழங்கப்படும். இந்த தீவை எப்படி பார்த்து கொள்வது என்ற புரிதலும், புதிய திட்டங்களும் இருக்க வேண்டும்.
'நடந்து செல்லவா...'
பள்ளச் சதுப்பு நிலத்தின் குறுக்கே அமைந்துள்ள பாதையில் அலைகள் குறைவாக இருக்கும்போதுதான் அந்த தீவுக்கு நடந்து செல்ல முடியும்.

அந்த தீவில் அமைந்துள்ள வீடானது 1960ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முழுவதுமாக கைவிடப்பட்ட அந்த வீடு 2005ஆம் ஆண்டு லியோ தொண்டு நிறுவனத்தின் துணையுடன் புனரமைக்கப்பட்டது.

பட மூலாதாரம், VISIT GUERNSEY
இந்த தீவில் 14 ஆண்டுகளாக பணியாற்றிய கர்டீஸ், இந்த தீவில் இத்தனை ஆண்டுகள் பணியாற்றியது கெளரவம் என்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












