அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்: ஆசிய - பசிஃபிக் மாட்டில் எதிரொலிப்பு

சர்வதேச மாநாட்டில் எதிரொலித்த அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் வர்தகப்போரால் உண்டாகியுள்ள கருத்து வேறுபாடுகளால், முதல் முறையாக ஆசிய - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு (Asia-Pacific Economic Cooperation) உச்சிமாநாடு, அதில் பங்கேற்ற தலைவர்களின் கூட்டறிக்கை வெளியிடப்படாமேலேயே முடிவடைந்துள்ளது.

தலைவர்களின் கூட்டறிக்கை இல்லாமல் இம்மாநாடு நிறைவடைவது இதுவே முதல் முறை ஆகும்.

இரு மிகப்பெரிய நாடுகளும் பல விவகாரங்களில் ஒப்புக்கொள்ளவில்லை என இந்த மாநாடு நடந்த பப்புவா நியூ கினியாவின் பிரதமர் பீட்டர் ஓ'நீல் கூறியுள்ளார்.

பப்புவா நியூ கினியாவில் கப்பற்படை தளம் ஒன்றை அமைக்கும் ஆஸ்திரேலியாவின் முயற்சியில் அமெரிக்காவும் பங்கெடுக்கும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியிருந்தார்.

சர்வதேச மாநாட்டில் எதிரொலித்த அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்

பட மூலாதாரம், AFP

இது பசிஃபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக பார்க்கப்பட்டது.

'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' எனப்படும் அந்நாட்டின் உள்நாட்டு வர்த்தக நலன்களைப் பாதுகாக்கும் கொள்கை சபிக்கப்பட்டது என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் சனிக்கிழமை கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து சீனா மீது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை தற்போது விதிக்கப்படும் அளவில் இருந்து இரு மடங்காக்க தாம் தயாராக இருந்ததாக மைக் பென்ஸ் கூறியிருந்தார்.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஷி ஜின்பிங்

சீனா சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்த பல்வேறு நாடுகளிலும் சாலை அமைத்துவரும் திட்டம் (Belt-and-Road infrastructure programme) வெளிப்படைத்தன்மை அற்ற சீன முதலீடுகள் சிறு நாடுகளை பெரும் கடன் சுமையில் தள்ளும் என்று எச்சரித்திருந்தார்.

"அதற்கு பதிலாக அந்த நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டும். அமெரிக்காவோ அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது, ஊழல் செய்வது, அவர்கள் சுதந்திரத்தில் சமரசம் செய்துகொள்வது போன்றவற்றில் ஈடுபட்டதில்லை," என்று அவர் கூறியிருந்தார்.

இந்தத் திட்டத்திற்கு உள்நோக்கங்கள் எதுவும் இல்லை என ஷி ஜின்பிங் இதை மறுத்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: