மெய்நிகர் செய்தி வாசிப்பாளர்: நிஜத்தை நிழலாக்கும் சீனா

செயற்கை தொழிற்நுட்ப செய்தி வாசிப்பவர்: நிஜத்தை நிழலாக்கும் சீனா

நல்லதொரு சூட் அணிந்து, எந்திர மனிதனை ஒத்த குரலோடு மெய்நிகர் செய்தி தொகுப்பாளரை சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா வெளியிட்டுள்ளது.

எல்லாரும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், “தொழிற்முறை செய்தி தொகுப்பாளரைப் போல செய்தியை இயற்கையாக இதனால் வாசிக்க முடியும்" என்று சின்குவா செய்தி நிறுவனம் கூறுகிறது.

தன்னுடைய முதலாவது செய்தி அறிவிப்பின் தொடக்கத்தில் பேசும் இந்த மெய்நிகர் செய்தி தொகுப்பாளர் "ஹலோ, நீங்கள் ஆங்கில செய்தியை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்" என்று கூறுகிறார்.

இதனை வடிவமைப்பதில் சீன தேடுதல் பொறியான சோகௌவின் ஈடுபட்டது.

"தடையில்லாமல் எனது கணினியில் செய்தி தட்டச்சு செய்யப்படும்போது, நான் ஓய்வின்றி பணியாற்றி உங்களுக்கு தகவல்கள் வழங்குவேன்" என்று அறிமுக காணொளி ஒன்றில் இந்த செய்தி தொகுப்பாளர் கூறுகிறார்.

"மிகவும் புதிய செய்தி அனுபவங்களை வழங்குவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கொஞ்சம் வித்தியாசமான தோற்றத்தோடு, சீன மொழியில் பேசும் வகையிலும் ஒரு மெய் நிகர் செய்தி வாசிப்பாளர் பதிப்பு உள்ளது.

"செய்தி உற்பத்தி செலவுகளை குறைத்து, இணையதளத்திலும், சமூக ஊடக சேனல்களிலும் இந்த செய்தி தொகுப்பாளர் 24 மணிநேரம் வேலை செய்ய முடியும்” என்கிறது சின்குவா.

பிரேக்கிங் செய்திகளை விரைவாக வழங்குவதற்கு இந்த செயற்கை தொழிற்நுட்ப அமைப்பு மிகவும் உதவும் என்று இந்த செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

செய்தி தொகுப்பாளரின் குரல்கள், உதட்டு அசைவுகள் மற்றும் பாவனைகளை ஒத்தியங்க செய்ய இந்த செயற்கை மதிநுட்பம் உதவுகிறது.

சின்குவா செய்தி நிறுவனத்தில் வேலை செய்கின்ற நிஜ தொகுப்பாளர்களை அடிப்படையாக கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன.

மனிதரின் முப்பரிமாண டிஜிட்டல் மாதிரியை பயன்படுத்துவதைவிட இது வேறுபட்டதாகும்.

இந்த செய்தி தொகுப்பாளர் முற்றிலும் இயற்கையாக தோன்றவில்லை என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் வூல்டிரிஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.

செயற்கை தொழிற்நுட்ப செய்தி வாசிப்பவர்: நிஜத்தை நிழலாக்கும் சீனா

சில நிமிடங்களுக்கு பிறகு இந்த செய்திகளை பார்ப்பது மிகவும் கடினம். ஒரே தொனியில், ஒரே நபராக, வாசிக்கும் தாளமின்றி, அழுத்தமின்றி செய்திகள் வாசிக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

நிஜ செய்தி தொகுப்பாளர்கள் பாரம்பரியமாக மிகவும் நம்பகரமான பிரபல நபர்களாகியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது நல்லதொரு முதல் முயற்சி என்கிறார் ஷிஃபீல்ட் பல்கலைக்கழக செயற்கை மதிநுட்பம் மற்றும் எந்திரவியல் பேராசிரியர் நோயல் ஷார்கே.

காலம் செல்ல செல்ல இதில் மேம்பாடு காணலாம் என்று கூறும் அவர் இதில் பிரச்சனை உற்சாகமில்லாமல் தோன்றுவதாகும் என்கிறார்.

சென்னையில் ஒரு மெய்நிகர் உலகம்

காணொளிக் குறிப்பு, சென்னையில் ஒரு மெய்நிகர் உலகம் (காணொளி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: