எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறாமல் பணியாற்றிய ஆளுநர்

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறாமல் பணியாற்றிய ஆளுநர்

ஓஷுன் ஆளுநர் ராவுஃப் அரெக்பெஸோலா

பட மூலாதாரம், RAUF AREGBESOLA, FACEBOOK

படக்குறிப்பு, ஓஷுன் ஆளுநர் ராவுஃப் அரெக்பெஸோலா

நைஜீரியாவின் தென் மேற்கில் உன்ள ஓஷுன் நாட்டின் ஆளுநர், தான் பணியில் இருந்த எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறவில்லை என்று கூறியுள்ளார். தற்போது அவர் பணியில் இருந்து விடைபெறும் நேரத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

ஓஷுன் ஆளுநர் ராவுஃப் அரெக்பெஸோலா ஒரு கூட்டத்தில் பேசும்போது, இந்த நாடு தனக்கு சாப்பாடு போட்டு, வாகனங்கள் அளித்து, தங்க இடமும் வழங்கியுள்ளதால், பணத் தேவை இருக்கவில்லை என்று தெரிவித்தார்.

"இதெல்லாம் என்னிடம் இருந்தபோது, எனக்கு பணம் தேவையில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

இவர் வார்த்தைகளில் நம்பிக்கையற்ற சிலர், சமூக ஊடகங்களில் இவரை குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Presentational grey line

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம், Reuters

பிரான்சில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அதிபர் இம்மானுவேல் மக்ரூன் பொதுமக்களை கைவிட்டுவிட்டதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த போராட்டங்கள் குறித்து இதுவரை அதிபர் மக்ரோங் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்றும் சில போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஓராண்டில் பிரான்சில் 23 சதவீதம் அளவிற்கு டீசல் விலை உயர்ந்துள்ளது.

Presentational grey line

ஜமால் கஷோக்ஜி கொலை : முடிவுக்கு வராத அமெரிக்கா

அமெரிக்கா

பட மூலாதாரம், AFP

பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்வதற்கான உத்தரவு சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் இருந்தே வந்தது என மத்திய புவனாய்வு நிறுவனம் நம்புவதாக தெரிவித்தும், இந்த கொலை தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

"பல கேள்விகள் இன்னும் பதில் இல்லாமல் இருக்கின்றன" என அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பங்கு இல்லாமல் இக்கொலை நடந்திருக்க முடியாது என சில செய்தி வட்டாரங்கள் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதனை சௌதி அரேபியா மறுத்துள்ளது.

Presentational grey line

ஐஸ்டின் பீபருடன் திருமணமானதை உறுதிபடுத்திய ஹெய்லி பால்ட்வின்

ஹெய்லி பால்ட்வின் - ஜஸ்டின் பீபர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹெய்லி பால்ட்வின் - ஜஸ்டின் பீபர்

ஹெய்லி பால்ட்வின் மற்றும் பிரபல பாடகரான ஜஸ்டின் பீபர் இருவருக்கம் திருமணமானது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹெய்லி பால்ட்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹெய்லி பீபர் என்று மாற்றியுள்ளார்.

ஜஸ்டின் பீபர், ஹெய்லியுடன் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து, அதில் தனது மனைவி என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரும், கடந்த செப்டம்பர் மாதம், ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

ஹெய்லி பால்ட்வின் - ஜஸ்டின் பீபர்

பட மூலாதாரம், Instagram

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: