2400 ஆண்டுகளாக கடலுக்கடியில் இருந்த கிரேக்க கப்பல்

BLACK SEA

பட மூலாதாரம், BLACK SEA MAP/EEF EXPEDITIONS

2400 ஆண்டுகால கப்பல் கண்டுபிடிப்பு

பல்கேரியாவின் கடல் எல்லைக்குள் 2400 ஆண்டுகள் பழமையான கிரேக்க வர்த்தகக் கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

23 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சிதிலமைடையாமல் நல்ல நிலையில் இருப்பதாக இதைக் கருங்கடலில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலின் மேற்பரப்பில் இருந்து 2000 மீட்டர் ஆழத்தில் ஆக்சிஜன் அதிகம் இல்லாத பகுதியில் இருந்ததால் இது சிதிலமைடையாமல் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்களின் எச்சங்களில், சிதிலமைடையாமல் இருப்பவற்றில் இந்தக் கப்பல்தான் மிகவும் பழையது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

விண்ணில் மிதக்கும் தொலைநோக்கி

Nasa 'fixes' Hubble malfunction

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, 1990 முதல் விண்ணில் மிதந்து இது இதுவரை பூமியில் உருவாக்கப்பட்ட முக்கிய அறிவியல் சாதனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ஹபில் தொலைநோக்கியில் உண்டான பழுதை சரிசெய்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் சுழற்காட்டி ஒன்றில் உண்டான பழுது, அந்தத் தொலைநோக்கி சுழலும் திறனை பாதித்தது.

இலங்கை

வில்லா சூறாவளி

வில்லா சூறாவளி

பட மூலாதாரம், Getty Images

’வில்லா’ என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, மெக்சிகோவில் பசிஃபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பகுதிகளை தாக்கி 'உயிராபத்தை உண்டாக்கலாம்' என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூறாவளியால் பேரழிவு உண்டாகும் சாத்தியம் உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை

டிரம்ப் - புதின் சந்திப்பு

டிரம்ப் - புதின்

பட மூலாதாரம், Reuters

அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே பனிப்போர் நிலவிய காலத்தில், இரு நாடுகளும் கையெழுத்திட்ட அணு ஆயுத பயன்பாடு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றிலிருந்து அமெரிக்கா விலகுவதாக கூறியபின் உண்டாகியுள்ள மோதலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்திக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் பாரிசில் நடக்கவுள்ள முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவேந்தலின்போது அவர்கள் இருவரும் சந்திப்பார்கள் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார்.

இலங்கை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :