ஹாங்காங் ஜூஹாய்-மக்காவ் கடற்பாலம்: ஒன்பது ஆண்டு உழைப்பில் உயிர் பெற்றது
கடந்தசில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
உலகின் நீளமான கடல் பாலம்

பட மூலாதாரம், Getty Images
உலகின் நீளமான கடல் பாலத்தை இன்று சீனா திறக்க இருக்கிறது. இருபது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒன்பது ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த பாலம் ஹாங்காங்கையும் சீனாவையும் இணைக்கிறது. சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என நம்பப்படுகிறது. பெரும் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை விமர்சகர்கள் ’வெள்ளை யானை’ என்று அழைக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

ஒரு தீவு, ஓராயிரம் கதை

பட மூலாதாரம், WORLD VISION AUSTRALIA
நரூ தீவில் உள்ள தடுப்பு காவல் முகாமிலிருந்து 11 குழந்தைகள் மருத்துவ வசதிகள் பெறுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் ஆயிரகணக்கான மக்கள் நரூ தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த தீவில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மோசம் அடைந்துள்ளதாக தொடர்ந்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். குறிப்பாக முகாம்களில் உள்ள குழந்தைகள் மோசமான மனசிதைவுக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

சூறாவளி தாக்கும்

பட மூலாதாரம், Getty Images
பெரும் சூறாவளி ஒன்று பசிபிக் கடலின் சில பகுதிகளை தாக்கும் என மெக்சிகோ எச்சரித்துள்ளது. வில்லா என பெயரிடப்பட்டுள்ள அந்த சூறாவளி மெக்சிகோவின் தென் மேற்கு கடற்பகுதியில் நிலச்சரிவை ஏற்படுத்தும் என்றும் மோசமான பேரழிவுக்கும் இது வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தேசிய சூறாவளி மையம் எச்சரித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட மைக்கேல் புயலிலன் காரணமாக 27 பேர் பலியானார்கள்.


நான் இஸ்ரேலில் இருக்கிறேன்

பட மூலாதாரம், AFP/Getty Images
கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நைஜீரிய பிரிவினைவாத தலைவர் நம்டி கானு தாம் இஸ்ரேலில் இருப்பதாக கூறி உள்ளார். சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வரும் பியாஃப்ரா ரேடியோவில் பேசிய அவர், "நான் இஸ்ரேலில் இருக்கிறேன்" என்று கூறி உள்ளார். கானு தென் கிழக்கு பகுதியில் உள்ள பியாஃப்ரா பகுதியை தனி நாடாக அறிவிக்க, அங்கீகரிக்க வேண்டுமென போராடி வருகிறார் கானு.

கசோஜி கொலை: ரியாத்தில் நடந்த பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Reuters
பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலையில் செளதியின் பங்கு குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மூத்த அமெரிக்க அதிகாரி செளதி அரேபியாவின் முடியரசருடன் ரியாதில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்டீஃபன் முஷின், முகமத் பின் சல்மானை திங்களன்று சந்தித்தார்.ரியாதில் நடந்த இந்த சந்திப்பு குறித்து அமெரிக்கா இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. அக்டோபர் 2ஆம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்துக்கு சென்ற கசோஜி கொல்லப்பட்டார் என துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் கசோஜி தூதரகத்துக்கு வந்த நாளிலே திரும்பி சென்றுவிட்டார் என செளதி கூறி வந்தது பின் கடந்த வெள்ளியன்று முதன்முறையாக கசோஜி இறந்துவிட்டார் என்றும் சண்டை ஒன்றில் அவர் கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












