அமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சி எதிரொலி: ஆசிய பங்கு சந்தை கடும் சரிவு

அமெரிக்காவில் விழுந்த அடி, சரிந்தது ஆசியா பங்கு சந்தை

பட மூலாதாரம், Getty Images

வட்டி விகிதம் தொடர்பாக அமெரிக்க மத்திய வங்கி எடுத்த முடிவும், வணிக சண்டையும் ஆசிய பங்கு சந்தையில் எதிரொலித்தது. அமெரிக்க பங்கு சந்தை மோசமாக வீழ்ந்ததை தொடர்ந்து ஆசிய பங்கு சந்தையும் வீழ்ச்சி அடைந்தது.

ஜப்பான் பங்கு சந்தை நீக்கே 3.9 சதவீதம் வீழ்ந்தது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவே மிக மோசமான வீழ்ச்சி.

சீன பங்குசந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவை சந்தித்திருக்கிறது.

மேலும் சுமை

அமெரிக்கா உள்நாட்டு பொருளாதாரம் உறுதியான வளர்ச்சியை சந்தித்தது. இதனை அடுத்து கடந்த மாதம் வட்டி விகிதத்தை உயர்த்தியது.

வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து கடன் வாங்குவது மக்களுக்கு சுமையாக மாறியது. இதனால் பொருளாதாரம் இறங்கு முகத்தை சந்தித்தது.

இதுமட்டுமல்லாமல், அமெரிக்கா சீனா வணிக சண்டையும் முதலீட்டாளர்களை மேலும் கலக்கமடைய செய்தது.

அமெரிக்காவில் விழுந்த அடி, சரிந்தது ஆசியா பங்கு சந்தை

பட மூலாதாரம், Getty Images

தென் கொரியா பங்கு சந்தை 3.4 % சதவீதமும், ஆஸ்திரேலியா பங்கு சந்தை 2.4 சதவீதமும் வீழ்ந்துள்ளது.

முட்டாளாகிவிட்டார்கள்

அமெரிக்க பங்கு சந்தை எதிர்பார்க்கப்பட்டதைவிட இந்தாண்டு நன்றாகவே செயல்பட்டது.

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதுதான் இந்த வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

அமெரிக்காவில் எப்போதும் மத்திய வங்கியின் சுதந்திரமான செயல்பாடு மதிக்கப்படும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்திய வங்கியை விமர்சித்துள்ளார்.

"மத்திய வங்கி தவறு செய்கிறது", "அவர்கள் முட்டாளாகிவிட்டார்கள் என நன் நினைக்கிறேன்" என விமர்சித்துள்ளார் டிரம்ப்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :