உய்கர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து போதனை செய்வதை சட்டமாக்கிய சீனா

பட மூலாதாரம், CHINA PHOTOS/GETTY IMAGES
சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சின்ஜியாங் பிரதேசத்தில் மதத் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று அதிகாரிகள் கூறுகிற உய்கர் முஸ்லிம்களை போதனை முகாம்களில் அடைத்து அவர்களுக்கு கருத்தியல் கல்வி புகட்டுவதை சீனா சட்டபூர்வமாக்கியுள்ளது.
சின்ஜியாங்கில் உய்கூர் முஸ்லிம்கள் காணாமல் போவது தொடர்பாக உலக அளவில் கவலைகள் எழுந்துள்ளன.
10 லட்சம் உய்கர் முஸ்லிம்களை சீனா சிறையில் அடைத்திருக்கலாம் என்ற புகார் ஐநா மனித உரிமைகள் குழுவின் கவனத்துக்கு வந்தது. இந்த பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முதல் முறையாக விளக்கமாக இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

பட மூலாதாரம், Reuters
தொழிற்பயிற்சி அளிப்பதும், நடத்தையை திருத்துவதும், கருத்தியல் கல்வி வழங்குவதும் இதன் நோக்கமாக இருக்கும் என்று இந்த முகாம்களை சட்டபூர்வமாக்கியுள்ள சின்ஜியாங் பிரதேச அரசு கூறுகிறது.


இந்நிலையில், சின்ஜியாங்கில் நிலவும் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு எதிரான பெரியதொரு நடவடிக்கையை சீனா தொடங்கியுள்ளது. உணவு பொருட்கள் அல்லாத ஹலால் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த சீனா விரும்புகிறது.
பற்பசை போன்ற பொருட்களை ஹலால் என்ற சொல்லால் குறிப்பது, மதம் சார்ந்த மற்றும் மதச்சார்பற்ற வாழ்க்கைக்கு இடையிலான கோடுகளை அழித்து, மதத்தீவிரவாதத்துக்கு மக்களை இரையாக்குவதாக செய்தித்தாள் ஒன்று குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் துணிகளை அணிவது தடை செய்யப்படுவதாக புதிய விதிமுறைகள் தெளிவுபடுத்தியுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், அரசு அதிகாரிகளும் பொதுவெளியில் பேசும்போது உள்ளூர் மொழியில் அல்லாமல், மான்ட்ரின் சீன மொழியில் பேச வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது.
10 லட்சம் முஸ்லிம்களை சிறையில் அடைத்து சீனா சித்ரவதை?
பிற செய்திகள்:
- "கடவுள் மீது எனக்கு கோபம் கிடையாது; மனிதர்கள் மீதுதான்" - ஒரு தேவதாசியின் கதை
- பா.ஜ.க அமைச்சர், எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார்
- உங்கள் குழந்தைக்கு மனநோய் இருந்தால் கண்டறிவது எப்படி?
- சூறாவளி மைக்கேல்: மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியது - அச்சத்தில் புளோரிடா
- பின் லேடனும், ஜமால் கசோஜியும்: யார் இந்த மாயமான சௌதி பத்திரிகையாளர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













