இந்தோனீசியா: சுலவேசி தீவையே புரட்டிப்போட்ட சுனாமி (புகைப்படத் தொகுப்பு)

இந்தோனீசியாவில் வெள்ளிக்கிழமை 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி கிட்டத்தட்ட 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கடலோர பாலு நகரம் பெரும் அழிவுக்குள்ளாகியது.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட சுனாமி அலைகளால் கடலோர பாலு நகரம் பெரும் அழிவுக்குள்ளாகியது.
இந்த நகரில் மட்டுமே குறைந்தது 384 பேர் பலியாகியுள்ளனர்.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, 3 மீட்டர் (10 அடி) உயரமான அலைகள் பாலு நகரம் முழுவதிலும் எழுந்ததை தொடர்ந்து, இந்த நகரில் மட்டுமே குறைந்தது 384 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தோனீசியா நிலநடுக்கம்: கரை ஒதுங்கும் சுனாமியில் அடித்துச்செல்லப்பட்ட உடல்கள்

பட மூலாதாரம், AFP

பாலு நகரில் காணமல்போன உறவினர்களை சடலங்கள் வைக்கப்பட்டுள்ள பைகளில் தேடும் உள்ளூர் மக்கள்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பாலு நகரில் காணமல்போன உறவினர்களை சடலங்கள் வைக்கப்பட்டுள்ள பைகளில் தேடும் உள்ளூர் மக்கள்.
பெரிய அழிவுகளால் வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் பெரு வணிக வளாகங்கள் இடிந்தன.

பட மூலாதாரம், Image copyrightANTARA FOTO/ROLEX MALAHA VIA REUTER

படக்குறிப்பு, பெரிய அழிவுகளால் வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் பெரு வணிக வளாகங்கள் இடிந்தன.
வெள்ளிக்கிழமை தொடங்கயிருந்த ஒரு கடற்கரை திருவிழாவின் பங்கேற்பாளர்களுக்கு என்ன ஆனது என்ற கவலை எழுந்துள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை தொடங்கயிருந்த ஒரு கடற்கரை திருவிழாவின் பங்கேற்பாளர்களுக்கு என்ன ஆனது என்ற கவலை எழுந்துள்ளது.
இந்நிலையில், காயமடைந்தோருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, இந்நிலையில், காயமடைந்தோருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
நகரவாசிகள் பலர் தொருக்களில் படுத்து உறங்கினர்.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, நிலநடுக்கத்திற்கு பிறகு தொடர்ந்த வலிமையான நில அதிர்வுகளால், நகரவாசிகள் பலர் தொருக்களில் படுத்து உறங்கினர்.
கடற்கரை பகுதிகளில் உயிர் தப்பி இருப்போரை மீட்கும் பணியை மீட்புதவி குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், EPA

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :