அமெரிக்காவில் உளவு பார்த்ததாக சீன நாட்டை சேர்ந்தவர் கைது

சீனாவை சேர்ந்த ஒருவர் அமெரிக்க பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை சீனாவின் சார்பில் உளவுப் பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

சட்ட விரோத உளவாளியாக செயல்பட்டதாக 27 வயதாகும் ஜு ஷாக்குவான் சிகாகோவில் கைது செய்யப்பட்டார் என அமெரிக்க அட்டார்னி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மின் பொறியியல் படிப்பதற்காக 2013ஆம் ஆண்டு அமெரிக்கா வந்துள்ளார் ஷாக்குவான். 2016ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர அவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

சிகாகோ நீதிமன்றத்தில் பதிவான குற்றவியல் புகாரின்படி ஷாக்குவான்-ஜி உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு பணி புரிந்ததாக குற்றம் சுமத்தப்படுகிறது.

சீன பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளையும் அவர் குறி வைத்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். அவர் குறிவைத்த சிலர் பாதுகாப்புத் துறைக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் இருப்பவர்கள்.

மாணவர்களுக்கான விசாவில் சீனாவிலிருந்து 2013ஆம் ஆண்டு ஷாக்குவான் அமெரிக்கா வந்துள்ளார். பின் சிகாகோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

அமெரிக்க குடிமக்கள் அல்லாதோர்கள் ராணுவத்தில் சேர வழிவகுக்கும் ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் அவர் ராணுவத்தில் சேர விண்ணப்பித்திருந்தார். அதன்படி தான் கடந்த ஏழு ஆண்டுகளாக எந்த வெளிநாட்டு அரசுடனும் தொடர்பு வைத்திருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

ஆனால் பின்னர் உளவுத்துறை அதிகாரியுடன் தனக்கிருக்கும் தொடர்பு குறித்த அமெரிக்க ராணுவ அதிகாரியின் கேள்விக்கு அவர் பதில் கூற தவறிவிட்டார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியேறிகளை ராணுவத்தில் சேர்க்கும் அந்த சிறப்புத்திட்டம் 2008 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி இதுவரை 11,000 குடியேறிகள் அமெரிக்க ஆயுதப் படையில் சேர்ந்துள்ளனர்.

மொழி மற்றும் மருத்துவத்துறையில் சிறப்பு திறமை பெற்ற குடியேறிகளை குடிமக்களாக கருதி அமெரிக்க ராணுவம் பணியில் சேர்த்துக் கொள்ளும்.

ஆனால் இது பாதுகாப்பு நோக்கம் கருதி 2016ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில், திடீரென்று சேவையிலிருந்து நிறுத்தப்பட்டவர்கள் அமெரிக்க ராணுவம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :