சர்வதேச விண்வெளி மையத்தில் காற்று கசிவு; சரி செய்யும் வீரர்கள்
கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
சர்வதேச விண்வெளி மையத்தில் காற்று கசிவு

பட மூலாதாரம், NASA
சர்வதேச விண்வெளி மையத்தில் சிறு மோதல்கள் ஏற்பட்டிருக்கும் சாத்தியங்களால் உண்டான காற்று கசிவினை சரிசெய்யும் பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாறை போன்ற ஒன்று விண்ணில் பறந்தது இதன் மீது பட்டதால் இந்த கோளாறு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
விண்வெளி மையத்தில் உள்ள ஆறு பேருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று ஹஸ்டன், டெக்சாஸ் மற்றும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் தெரிவித்துள்ளன.

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தை விமர்சிக்கும் அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images
ஹாவர்ட் பல்கலைக்கழகம், இன சமநிலையை வைத்து மாணவர்களை தேர்வு செய்வதாக அமெரிக்க நீதித்துறை விமர்சித்துள்ளது.
இனத்தை வைத்து மாணவர் தேர்வு நடைபெறுவதாக, அப்பல்கலைக்கழகம் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆசிய-அமெரிக்க மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு நிலவுவதாக இருக்கும் குற்றச்சாட்டை ஹாவர்ட் பல்கலைக்கழகம் மறுத்து வருகிறது.

சிரியா: மோசமான சூழல் ஏற்படும் அபாயம்

பட மூலாதாரம், AFP
கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தும் தாக்குதலை அரசு நடத்தினால், தென்-மேற்கு சிரியாவில் மோசமான சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதாக சிரியாவுக்கான ஐ.நா தூதர் எச்சரித்துள்ளார்.
அங்குள்ள பொதுமக்களை தற்காலிகமாக வெளியேற்ற மனிதாபிமான தாழ்வாரங்களை அமைக்க வேண்டும் என்று ஸ்டஃபன் டி மிஸ்டுரா கூறியுள்ளார். சிரியாவின் பல்வேறு பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையில், இப்படியொரு தாக்குதல் நடத்தினால், அதுவே இந்தப் போரின் கடைசி யுத்தமாக இருக்கும்.

நாட்டை விட்டு வெளியேற முடியாத உகாண்டா பாப் பாடகர்

பட மூலாதாரம், Getty Images
உகாண்டாவின் பாப் பாடகரான பாபி வைனுக்கு ஜாமின் வழங்கப்பட்டும், மருத்துவ சிகிச்சைக்காக அவர் நாட்டை விட்டு வெளியேற தடை செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
கடந்த வாரம், அந்நாட்டு அதிபர் யொவெரி மூசெவென்னியின் கான்வாய் மீது கல் வீசப்பட்டதையடுத்து அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

டிரம்ப் அச்சுறுத்தல்

பட மூலாதாரம், EPA
உலக வர்த்தக அமைப்பு அமெரிக்காவை நடத்தும் விதத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதிலிருந்து விலக போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
"அவர்கள் மாறவில்லை என்றால் நான் உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுவேன்" என ப்ளூபெர்க் நியூஸ் ஊடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தக விதிமுறைகளை வகுக்கவும், நாடுகளுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளை தீர்க்கவும் உலக வர்த்தக அமைப்பு நிறுவப்பட்டது ஆனால் அந்த நிறுவனத்தால் அமெரிக்கா நியாமாக நடத்தப்படவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












