சௌதி அரேபியா: மேலும் இரண்டு பெண் செயற்பாட்டாளர்கள் கைது

சௌதி அரேபியாவில் மேலும் இரண்டு முக்கிய பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Saudi Arabia

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கடந்த ஜூன் மாதம் சௌதியில் பெண்கள் வாகனம் ஓட்ட இருந்த தடை நீக்கப்பட்டது

ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள வலைப்பதிவர் ராயிஃப் பதாவியின் சகோதரி சாமர் பதாவி மற்றும் நசீமா அல்-சதா ஆகியோர், இரண்டு நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, கல்ஃப் சென்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் (Gulf Centre for Human Rights) எனும் மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

இருவருமே சௌதி அரேபியாவில் பெண்ணுரிமை போராட்டங்களுக்காக அறியப்பட்டவர்கள். இவர்கள் பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்த வெற்றிகரமான பிரசாரத்தின் பின்னணியில் இருந்தவர்கள்.

கடந்த சில மாதங்களில் பல பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வெளிநாட்டு சக்திகளுக்காக பணியாற்றும் சாத்தியம் நிறைந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: