சிங்கப்பூர் உச்சிமாநாடு: 'வட கொரியா மீதான தடைகள் தொடரும்' - டிரம்ப்

சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கி நண்பகலில் முடிந்தது. இரு தலைவர்களும் சில முக்கிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர்.
இந்த சந்திப்பு நடந்து முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மாநாட்டில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்தும், அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான எதிர்கால உறவுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த உச்சிமாநாடு குறித்த செய்திகள் இன்று காலை 5.36 ( இந்திய நேரம்) தொடங்கி பகல் 2.30 மணி வரை பிபிசி தமிழ் வலைதளத்தில் நேரலை செய்யப்பட்டது.
14.30: வடகொரியா மீதான தடைகள் விலக்கு எப்போது?
அணு ஆயுத பயன்பாடு முடியும்போதுதான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"நான் தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்," என்று கூறிய டிரம்ப் ''அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்த தடைகள் தொடரும்'' என்று குறிப்பிட்டார்.
14.03 மனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது
மனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக என்ற கேள்விக்கு, ஓப்பீட்டளவில் சுருக்கமாக விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், வட கொரியாவில் மிச்சமுள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்ப அனுப்பப்படுவார்கள் என்று கிம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.
13.57 போர் விளையாட்டுகள் நிறுத்தப்படும்
வட கொரியாவிற்கு கொடுக்கப்படும் உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக தங்களின் ராணுவ திறன்களை குறைக்கப்போவதில்லை என்று டிரம்ப் கூறினார்.
ஆனால், தென் கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

13.54 "கிம் ஒரு புத்திசாலி" - டிரம்ப்
கிம் நல்ல புத்திசாலியானவர். சிறு வயதிலேயே ஆட்சியில் அமர்ந்து, நாட்டை ஆள்கிறார்.

13.49 முக்கிய அணு ஆயுத சோதனை தளம் அழிக்கப்படும்
முக்கியமான அணு ஆயுத சோதனை தளத்தை ஏற்கனவே கிம் அழிக்கத் தொடங்கியதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
அணு ஆயுதங்களை கைவிட்டால், வட கொரியா பல விஷயங்களை சாதிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், "மற்ற நாடுகள் வட கொரியாவுடன் தொடர்பில் இருக்க வேண்டும்" என்றார்.

13.49: பத்திரிகையாளர் சந்திப்பில் கிம்மை புகழ்ந்த டிரம்ப்
உண்மையான மாற்றம் சாத்தியமே. வட கொரிய தலைவர் கிம் உடனான சந்திப்பு நேர்மையாகவும், நேரடியாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்ததாக டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

13.47: செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters
"கடந்த 24 மணி நேரம் பிரம்மாண்டமாக இருந்தது. சொல்லப் போனால் கடந்த 3 மாதங்களுமே அப்படிதான் இருந்தது" என்றார் டிரம்ப்
அற்புதமான இடமாக இருக்க வட கொரிய நாட்டிற்கான சாத்தியம் அதிகமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

1.45: அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பு: சிங்கப்பூரிலிருந்து பிரத்யேக நேரலை
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு, 1
1.30: "தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அதிபர் அவர்களே" என்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து கைகுலுக்கும்போது வடகொரிய தலைவர் கிம் தெரிவித்தார்.
உலகத் தலைவர்களை சந்திக்கும்போது எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட குறைவான நேரத்தையே கிம்முடன் கைகுலுக்கும்போது டிரம்ப் எடுத்துக்கொண்டார்.

பட மூலாதாரம், AFP
சிங்கப்பூரிலிருந்து நேரலை
12.55: உச்சிமாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்களை சுட்டிக்காட்டுகிறார் பிபிசி செய்தியாளர் லாரா பிக்கர். அந்த பிரகடனங்களை விரிவாக படிக்க, டிரம்ப் - கிம் உச்சிமாநாடு : 4 முக்கிய பிரகடனங்கள்
12.47:எப்போதும் போல இன்று ஒளிபரப்பை ஆரம்பித்த வட கொரிய அரசு தொலைக்காட்சியில் அந்நாட்டு தலைவர் கிம்மும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சிங்கப்பூரில் சந்தித்து கொண்டது குறித்து எந்த செய்தியும் குறிப்பிடப்படவில்லை.

பட மூலாதாரம், KCTV

12.40 அரசியல் ராக்ஸ்டார் கிம்?
சிங்கப்பூரில் கிம் வரவேற்கப்பட்டதை ஆராய்ந்த ஜென்னி டவுன், "ஆறு மாதங்களுக்கு முன் உலகில் வெறுக்கப்பட்ட தலைவர் கிம் என்று இருந்தது. ஆனால் தற்பேது அவர் பெரிய நட்சத்திரம் போல நடத்தப்படுகிறார்" என்று குறிப்பிட்டார்.
12.01: அணுஆயுதங்களை களைவதில் கிம் உறுதி
அணுஆயுதங்களை களைவது தொடர்பான நடவடிக்கைகளில் கிம் உறுதியாக உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு தலைவர்களுக்கும் இடையே கையெழுத்தான ஆவணங்கள் குறித்த தகவல்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ளது. கொரிய பிராந்தியத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக கிம் உறுதியுடன் உள்ளார் என்று ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

11.50: ஆட்சிகவிழ்ப்பு குறித்து அஞ்சினாரா கிம்?
கிம் ஜோங் - உன் தான் பதவி ஏற்றதிலிருந்து முதல் ஆறு ஆண்டுகளுக்கு வெளிநாடுகள் எதற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. தான் வட கொரியாவில் இல்லாவிட்டால் அங்கு ஆட்சி கவிழ்ப்பு நேரிடும் என்று அவர் அஞ்சினார் என்று கருதப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு, முதலாவதாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார், பின் தென் கொரியாவிற்கும் அதன் பின் சிங்கப்பூருக்கும் அவர் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். கிம் ரஷ்யாவிற்கும் பயணம் மேற்கொள்ளலாம், என்கிறது பிபிசி மானிட்டரிங் பிரிவு.

11.47: 'இது கிம்முக்கு மிகப் பெரிய வெற்றி'
சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் நடைபெற்ற உச்சிமாநாடு, கிம்முக்கு மிகப் பெரிய வெற்றியை தருவதாக அமைந்துள்ளது என்று பிபிசி செய்தியாளர் ரூபர்ட் ஹேஸ் தெரிவித்தார்.
''அதே போல், டிரம்புக்கும் இது வெற்றி தரும் மாநாடுதான். கடந்த காலத்தில் இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவு நிலையில் இருந்து மாறுபட்ட நிலை தற்போதைய மாநாட்டில் காணப்பட்டது'' என்று அவர் மேலும் கூறினார்.
11.45 சென்டோசாவில் செய்தியாளர்களை சந்திக்கிறார் டிரம்ப்
அதிபர் டிரம்ப் இன்னும் சென்டோசா தீவில் இருப்பது போல தெரிகிறது. கேப்பெல்லா ஹோட்டலில் கையெழுத்திடப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11.32: சென்டோசா தீவிலிருந்து புறப்பட்டனர்

பட மூலாதாரம், Reuters
டிரம்பின் வாகன தொடரணி சென்டோசா தீவிலிருந்து புறப்பட்டது, பத்திரிகையாளர்களுடன் பின்னர் பேசுவதாக கிம் கூறினார். அதுபோல, கிம்மும் இன்னும் சில மணிநேரங்களில் சிங்கப்பூரிலிருந்து புறப்படுவார் என தெரிகிறது.
11.29: 'கிம்மை வெள்ளை மாளிகைக்கு அழைப்பேன்'
வெள்ளை மாளிகைக்கு கிம்மை அழைப்பீர்களா என்று அதிபர் டிரம்பிடம் கேட்டதற்கு, 'நிச்சயமாக அழைப்பேன்' என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், TWITTER
11.27: மனித உரிமை மீறல் குறித்து பேசப்பட்டதா?
இல்லை என்றே தெரிகிறது; 2016ஆம் ஆண்டு அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியர் வட கொரியாவில் கைது செய்யப்பட்டார். அங்கு சிறைபிடிக்கப்பட்ட வார்ம்பியர், 2017ஆம் ஆண்டு கோமா நிலையில் அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்ட சில நாட்களிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, டிரம்போ, கிம்மோ ஏதும் பேசவில்லை.
11.22 'தனது நாட்டின் மீது கிம் அதிக அன்பு வைத்துள்ளார்' - டிரம்ப்
"நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நிறைய தெரிந்து கொண்டோம்" என்று குறிப்பிட்ட டிரம்ப், கிம் ஜாங்-உன் புத்திசாலியானவர் என்று,ம் அவர் நாட்டின் மீது அதிக அன்பு வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
11.20 "சிறப்பு உறவு"
கிம் ஜாங்-உன்னுடன் சிறப்பான உறவு ஏற்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இன்று வரை உலகில் மிகவும் தனிமைபடுத்தப்பட்டு வந்த தலைவர் கிம் ஜாங்-உன் என்பது குறிப்பிடத்தக்கது.

11.16: முடிந்தது உச்சி மாநாடு
ஆவணங்களில் கையெழுத்திட்டபின், புன்னகைத்து, கைக்குலுக்கி டிரம்பும் கிம்மும் பிரிந்து சென்றனர்
கையெழுத்திடப்பட்ட ஆவணங்களின் நகல்கள் சிறிது நேரத்தில் செய்தியாளர்களிடம் தரப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

11.14: நாங்கள் கணித்ததைவிட, சிறப்பான சந்திப்பாக அமைந்தது: டிரம்ப்

"தற்போது ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் பெருமிதம் அடைகிறோம்
இதற்கு முன்பு இருந்த நிலையைவிட மாறுபட்டதாக இருக்கும்.
நாங்கள் விசேட உறவை ஏற்படுத்தி இருக்கிறோம்.
இந்த மாற்றத்தின் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
நாங்கள் கணித்ததைவிட, சிறப்பான சந்திப்பாக அமைந்தது.
நான் சேர்மன் கிம் அவர்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன்.
இன்று நடந்ததை நினைத்தால் பெருமையாக உள்ளது என்று கூறிய டிரம்ப், கடந்த காலத்தைவிட இனி வரவிருக்கும் வட கொரியாவுடனான உறவு மிகவும் வேறு மாதிரி இருக்கும் " என்றார் டிரம்ப்

11.13: பெரிய மாற்றத்தை பார்க்க போகும் உலகம்

"கடந்த காலத்தை விட்டுவிட போகிறோம்" என்று வட கொரிய தலைவர் கிம் கூறியுள்ளார்.
"பெரிய மாற்றத்தை இந்த உலகம் பார்க்கப் போகிறது" என்றார் அவர்.

11.12: கையெழுத்திடுகிறார்கள்

ஆவணங்களில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் வரலாற்று சிறப்புமிக்க, விரிவான ஆவணங்கள் என்று கூறப்படுகிறது.

11.10: விரிவான ஆவணங்கள்
புகைப்பட கலைஞர்கள் சூழ, கையெழுத்திடவிருக்கும் அறையில் டிரம்பும் கிம்மும் நுழைந்தனர்
"விரிவான ஆவணங்களில்" கையெழுத்திட இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

11.05: மேஜைக்கு கொண்டுவரப்பட்ட கோப்புகள்
டிரம்ப் - கிம் கையெழுத்திடவிருக்கும் மேஜையில் இரண்டு கோப்புகள் வைக்கப்பட்டுள்ளன. தலைவர்களுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
10.52: கையெழுத்திடப் போகும் மேஜை

டிரம்ப்-கிம் எந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகிறார்கள் என்று தெரியவில்லை.

10.49: பேனாவில் டிரம்பின் கையெழுத்து?

ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப்-கிம் வரவிருக்கும் மேஜையில், டிரம்ப் கையெழுத்திட போகும் பேனா வைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது.

10.40: "நரகத்தில் சிறப்பு இடம்?"
1,30,000 பேரை சிறையில் அடைத்து, சர்வாதிகாரியாக இருக்கும் கிம்மிற்கு நரகத்தில் சிறப்பு இடம் உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமெரிக்க எழுத்தாளர் நிக் ப்ரியன்ட்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
10.30: 9 மாதங்களுக்கு முன்பு வசைமொழி பொழிந்தனர்
'சேர்மன் கிம்மின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை மூன்று மாதங்களுக்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். அதே சமயம் வெறும் ஒன்பது மாதங்களுக்கு முன்பு கிம்மை 'குட்டி ராக்கெட் மனிதர்' என டிரம்ப் அழைத்ததும், டிரம்பை `பலவீனமான முதியவர்` என கிம் அழைத்ததும் நடந்தது.
''தற்போது அவர்கள் ஒரு உறவை உருவாக்கி சமாதானம் பேசுகிறார்கள். நிச்சயம் பெரும் தடைகளை கடக்க வேண்டி இருக்கும்.''

10.25:எச்சரிக்கையுடன் சிரித்த தலைவர்கள், லாரா பிக்கர்கொரிய செய்தியாளர்
''இது வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் குறிப்பிடத்தக்க கைகுலுக்கல்களில் ஒன்றாகும். இரு தலைவர்களின் சந்திப்பு நிகழ்ந்த வெள்ளை போர்ட்டிகோவில் யாரும் எண்ணிப்பார்க்காத வகையில், ஆறு அமெரிக்க கொடிகளின் அருகில் ஆறு வட கொரிய கொடிகள் பறந்தன.
''பிறகு இரு தலைவர்களும் தோன்றி, எச்சரிக்கையுடன் சிரித்தனர். தனது வழக்கான சிவப்பு நிற டையில் டிரம்ப் தோன்றினார். கிம்மும் தனது வழக்கான கறுப்பு நிர மாவோ உடையில் தோன்றினார். 12 நொடிகளுக்குக் கைக்குலுக்கல் நீடித்தது. பிறகு தங்களது மொழிப்பெயர்ப்பாளர்களுடன் அருகில் உள்ள அறைக்கு இருவரும் நடந்து சென்றார்கள்.

10.21: "எதிர்பார்த்ததை விட சிறந்ததாக இருக்கும்"
அவர்கள் என்ன ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை.
ஆனால் "இது யாரும் எதிர்பார்த்ததை விட சிறந்ததாக இருக்கும்" என்று அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
10.17: தோட்டத்தில் டிரம்ப்-கிம்
"கையெழுத்திட" போவதற்கு முன் தோட்டத்தில் நடந்த டிரம்ப் - கிம்

பட மூலாதாரம், AFP
10.16: உடன்படிக்கையில்கையெழுத்தா?
கையெழுத்திட தாங்கள் இருவரும் செல்வதாக டிரம்ப் கூறியுள்ளார். இதில் நாம் என்ன எதிர்பார்க்கலாம்? ''இரு கொரிய நாடுகளின் உச்சிமாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையைப் போன்ற ஒரு உடன்படிக்கையில் இருவரும் கையெழுத்திடலாம்'' என அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ராபர்ட் கெல்லி கூறுகிறார்.

10.13 "கிம் என்னை நம்ப வேண்டும்" - டிரம்ப்
தான் ஒப்பந்தங்கள் செய்வதில் வல்லவர் என்று கூறிய டிரம்ப், கிம் தன்னை நம்ப வேண்டும் என்று கூறினார். ஆனால் வட கொரியா இதனை கூர்ந்து கவனிக்கும்.
10.12: எது குறித்த கையெழுத்து?
எதுகுறித்த உடன்படிக்கை கையெழுத்தாகும் என்று தெரியவில்லை. "இன்னும் சில நிமிடங்களில் தெரிய வரும்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

10.09: மதிய உணவு இடைவேளை முடிந்தது
மதிய உணவை முடித்த டிரம்பும் கிம்மும் தோட்டத்தில் உலா வருகின்றனர்.
"கையெழுத்து நடவடிக்கைகள்" நடைபெற உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அதிபர் டிரம்ப்.

பட மூலாதாரம், Getty Images
9.50: கைக்குலுக்கலில் டிரம்புக்கு ஏமாற்றம்?
இதுவரை மூன்று முறை டிரம்பும் கிம்மும் கைக்குலுக்கி கொண்டுள்ளனர். மூன்று முறையும் அதிபர் டிரம்ப்தான் முதலில் கையை நீட்டினார் என்று பிபிசியிடம் கூறினார். உடல்மொழி நிபுணரான மனோஜ் வாசுதேவன். தனது ஆதிக்கத்தை உறுதிபடுத்தும் விதமாக டிரம்ப் இவ்வாறு செய்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், டிரம்ப் எதிர்பார்த்த கைக்குலுக்கலை அவர் பெறவில்லை என்று குறிப்பிட்ட மனோஜ், அமெரிக்க கலாசாரத்தில், நீண்ட நேர கைக்குலுக்கும் முறை பின்பற்றப்படும் என்றும், டிரம்புக்கு அது கிடைக்கவில்லை என்று கூறினார்.

9.21: 'இதுவரை உச்சிமாநாட்டில் நடந்தவை என்ன?'
நீங்கள் இப்போது ஐரோப்பாவில் இருக்கிறீர்கள் என்றால், இப்போதுதான் நீங்கள் எழுந்து இருப்பீர்கள் அல்லது நீங்கள் இப்போது ஆசியாவில் இருக்கிறீர்கள் என்றால் மதிய உணவு நேரத்தில் இருப்பீர்கள்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த உச்சிமாநாட்டின் சிறப்பு செய்தி சேகரிப்புக்கு உங்களை வரவேற்கிறோம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் , வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன்னும் சந்தித்து கைகுலுக்கி கொண்டனர்.
சரி, ஏன் இதனை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்று விளிக்கிறோம்?
ஏனெனில், இதற்கு முன்பாக பதவியில் இருக்கும்போது எந்த அமெரிக்க அதிபரும் வட கொரிய தலைவரை சந்தித்தது இல்லை.
பல தசாப்தங்களாக, மனித உரிமை மீறல், அணு ஆயுத சோதனை காரணமாக அந்நாடு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
கடந்தமாதம்தான், தமது வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்து கிம்மை சந்திக்க டிரம்ப் சம்மதம் தெரிவித்தார். வரலாற்றின் போக்கில் இது மிகப்பெரிய திருப்பம் என்பதால் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம்.

9.00: 'ஏன் நிகழ்ச்சி நிரலில் மனித உரிமை குறித்த உரையாடல்கள் இல்லை?'
“அமெரிக்க மனித உரிமை குறித்த விஷயங்களை கொண்டு வந்தால், அதற்கு வட கொரியர்கள் மிக மோசமாக எதிர்வினையாற்றுவார்கள். அதுதான், நிகழ்ச்சி நிரலில் மனித உரிமை குறித்த உரையாடல்கள் இல்லாததற்கு காரணம்,” என்கிறார் புஷன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் கெல்லி.
"மனித உரிமை குறித்த விஷயங்கள் கொண்டுவந்ததுதான் வட கொரியா உடனான முந்தைய பேச்சு வார்த்தைகளை சிதைத்தது.அதேநேரம், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்பட்சத்தில், மனித உரிமை அமைப்புகளிடமிருந்து கடுமையான அழுத்தம் வரும்." என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
8.55: 'உச்சி மாநாட்டில் என்ன உணவு?'
என்னதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை என்றாலும் அரசியல் தலைவர்களும் உணவு உண்ண வேண்டும் தானே? சரி மதியம் உச்சி மாநாட்டில் என்ன உணவு? மேற்கத்திய உணவு கலவையாக மெனு உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், தென் கொரிய உணவுகளின் ஆதிக்கம் தெரிகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
8.51: 'பதில் கூற மறுத்த கிம்'
செய்தியாளர்கள் கிம் ஜோங் - உன்னிடம், உங்கள் பிரதேசத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவீர்களா என்று இருமுறை கேட்டனர். ஆனால், அதற்கு பதில் அளிக்காமல் சென்றார் வட கொரிய தலைவர்.
பேச்சுவார்த்தை சுமூகமாக போய் கொண்டிருப்பதாக கூறினார் டிரம்ப்.

8.50: '38 நிமிடங்களில் நிகழ்த்தப்பட்ட வரலாறு'
அமெரிக்க அதிபர் டிரம்பும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன்னும் தனிமையில் 38 நிமிடங்கள் உரையாடியதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
8.40: 'பேச்சுவார்த்தையில் முக்கியபங்கு வகிக்கும் பெண்'
இன்று காலை பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்து, பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இந்த பெண் காணப்படுகிறார். யார் இவர்? என்ற கேள்வி அங்கு குழுமியிருந்த அனைவரிடமும் இருந்தது.
"அவர் வெறும் வார்த்தைகளை மொழிப்பெயர்க்கும் மொழிப்பெயர்ப்பாளர் மட்டுமல்ல, அனைத்து பொருளையும் புரிந்து விளக்குபவர். அவர் தான் பேச்சுவர்த்தை நடக்கும் அறையில் முக்கிய நபர்" என்று கேத்ரீன் என்றவர் ட்வீட் செய்துள்ளார்.

8.30: 'சிறை தேசம்'
வட கொரியா ஒரு சிறை தேசம். மனித உரிமை மீறல்களில் மோசமாக ஈடுபடும் தேசம். அந்நாட்டில் 2.5 கோடி மக்கள் சிறையில் இருக்கிறார்கள் என்று உச்சிமாநாடு நடக்கும் இந்த தருணத்தில் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார் வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் அன்னா.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3

8.10: 'மாறுபட்ட பாணி'
"முந்தைய வட கொரிய தலைவர்களிடமிருந்து வேறுபட்டவராக கிம் இருக்கிறார். அவரது தந்தை கிம் ஜோங் - இல்லிடமிருந்து வேறுபடுகிறார். அவரது பாணி வித்தியாசமானதாக இருக்கிறது" என்கிறார்கள் சிங்கப்பூரில் இருக்கும் பிபிசி செய்தியாளர்கள் ருபேர்ட் விங் ஃபீல்ட்.
மேலும் அவர்கள், "செயலில் எவ்வளவு வித்தியாசத்தை காட்டப் போகிறார் என்பதுதான் எல்லோருடைய மனதிலும் உள்ள கேள்வி?" என்கிறார்கள் அவர்கள்.

7.53: சிறப்பாக செல்லும் பேச்சுவார்த்தை
கிம் ஜோங் - உன் உடனான பேச்சுவார்த்தை எவ்வாறாக செல்கிறது என்று டிரம்பிடம் கேட்டோம். அதற்கு, "மிக மிக சிறப்பாக செல்கிறது. சிறந்த உறவு" என்று டிரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை செய்தியாளர் ஸ்காட் ஹார்ஸ்லி ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4

7.50: வட கொரிய பேராளர்கள் யார் யார்?
கிம் யோங் - சொல் : இவர்தான் கிம் ஜோங் - உன்னின் வலது கை என்று கூறப்படுகிறது.
ரி யோங் - ஹொ : வட கொரியா வெளியுறவு துறை அமைச்சர். இவர் முன்னதாகவே 1990ல் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அனுபவம் வாய்ந்தவர்.
ரி சு - யோங்: இவர் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர். ஆனால், இப்போதும் வட கொரியாவின் சக்திமிகுந்த தலைவராக இருக்கிறார்.

7.45: டிரம்புடன் இருப்பது யார்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒரு பக்கம் அமெரிக்க உள்துறை செயலாளர் மைக் போம்பியோவும், இன்னொரு பக்கம் வெள்ளை மாளிகை பணியாளர்களின் தலைவர் ஜான் எஃப். கெல்லியும் அமர்ந்திருக்கிறார்கள்.
பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் அந்த அறையில் உள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5

7.40: மனித உரிமை குறித்த உரையாடல் எங்கே?
வட கொரியாவிலிருந்து தப்பி அமெரிக்கா சென்ற கிரேஸ் ஜோ பிபிசியிடம், "மனித உரிமை குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படாமல் இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. அணு ஆயுத விவகாரத்தை மனித உரிமை விவகாரத்திலிருந்து பிரித்தெடுக்க முடியாது. மக்கள் பஞ்சத்தில், பசியில் மாண்டு கொண்டிருந்தபோது, அவர்கள் (வட கொரியா) அணு ஆயுதங்களை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தனர்" என்கிறார்.
7.30: முழுமையாக வட கொரியாவை புரிந்துக் கொள்ள இந்த இணைப்பை சொடுக்குங்கள் -300 சொற்களில் கொரிய நெருக்கடியை புரிந்துகொள்ளுங்கள்
7.25: தனியாக நூலகத்தில் பேச்சு வார்த்தை நடத்திய டிரம்பும், கிம்மும் பேச்சுவார்த்தை முடித்து வெளியே வந்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
7.22 :கிம் ஜோங் - உன்னின் ஆங்கில அறிவு எப்படி?
'நைஸ் டூ மீட் யூ மிஸ்டர் பிரஸிடெண்ட்," என்று ஆங்கிலத்தில் டிரம்பிடம் பேசி உள்ளார் கிம்.
வட கொரியா தலைவர்கள் குறித்து வெளி உலகத்திற்கு அதிகம் தெரியாது. ஆனால், கிம் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் என்று கூறப்படுகிறது.
7. 12: இந்த சந்திப்பு குறித்து தென் கொரியா என்ன சொல்கிறது?
தென் கொரியா அதிபர் தொடர்ந்து இது குறித்து பகிர்ந்த ட்வீட்டுகளில், இதனை முக்கியத்துவம் வாய்ந்த வாரலாற்று நிகழ்வாக வர்ணித்துள்ளார். "போரிலிருந்து அமைதியை நோக்கி நகர்ந்த வரலாற்று மைல்கல்' இது என்கிறார்.
7.05: தென் கொரியா அதிபர் மூன் ஜே - இன் இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 7
7. 00: உலகமே இந்த பேச்சுவார்த்தையை கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், வட கொரியாவை தவிர.
பிபிசி மானிட்டரிங் குழு, ஒரே தருணத்தில் தென் கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் வடகொரியாவில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்வினை ஸ்க்ரீன்சாட் எடுத்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 8
6.57: தென் கொரியாவில் மிகவும் பிரபலமான இணைய தேடுதளமான 'நேவர்' -ல் இன்று அதிகம் தேடப்பட்ட வார்த்தௌ கிம் ஜோங் - உன்.
6. 53: வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன்னும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தனியாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள கேப்பல்லா விடுதியில் உள்ள நூலக அறைக்கு சென்றனர்.

எப்படி இருந்தது அந்த கைகுலுக்கல்?
6.44: மனப்பூர்வமானதாக இருந்தது. ஆனால், அதே நேரம் மிகை நட்பானதாக இல்லை. தென் கொரியா அதிபர் மூன் ஜே வை சில வாரங்களுக்கு முன், கிம் சந்தித்தபோது இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர். ஆனால், அப்படியான இணக்கும் இல்லை.

6. 42: 'இப்போது நாம் இருக்கும் இடத்தை அடைந்திருப்பது, அவ்வளவு எளிதானது இல்லை' என்கிறார் வட கொரிய அதிபர் கிம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 9
6.40:மாநாடு நடக்கும் இடத்தில் சந்தித்து கொண்ட டிரம்ப் மற்றும் கிம் ஆகிய இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.
6.33: எதை குறித்தெல்லாம் பேச இருக்கிறார்கள். தென் கொரிய மற்றும் வட கொரிய சண்டையை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வருவது. வட கொரியா மற்றும் அமெரிக்க இடையே நிலவும் பதற்றத்தை தணிப்பது. இயன்றால் வட கொரியாவில் அமெரிக்க தூதரகம் திறப்பது. வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது. தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது. இவை குறித்தெல்லாம் உரையாட இருக்கிறார்கள். ஆனால், இவை அனைத்தையும் 45 நிமிடங்களில் பேசி ஒரு தீர்வை எட்டிவிட முடியுமா?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 10
6.30 : முதலில் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்திக்கிறார்கள். அவர்களுடன் மொழிப்பெயர்ப்பாளர்கள் மட்டும் இருப்பார்கள். சில மணிதுளிகளுக்கு பின்பே, பிற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கும் அறை உள்ளே வருவார்கள்.
6.28: இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் கேப்பல்லா விடுதிக்கு வந்தடைந்தனர்.
6.22: இந்த பேச்சுவார்த்தை குறித்த வரைகலைப்படம் ட்வீட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 11
6.14: பேச்சுவார்த்தைக்கு முன் டிரம்பிற்கு ஒரு கெட்ட செய்தி வந்துள்ளது. அவரது பொருளாதார ஆலோசகர் மாரடைப்பின் காரணமாக அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 12
6.13: பேச்சுவார்த்தை இங்குதான் இன்னும் 20 நிமிடங்களில் நடைபெற இருக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 13
6.03: கிம் உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு புறப்படுகிறார். இதனை அறிந்த உள்ளூர் மக்கள் ஆச்சர்யம் அடைந்ததாக கூறுகிறார் பிபிசி செய்தியாளர் ரூபர்ட் விங் ஃபீல்ட். இரண்டு நாட்கள் தங்கி நீண்ட பேச்சுவார்த்தையை இரு நாட்டு தலைவர்களும் நடத்துவார்கள் என்று அம்மக்கள் எதிர்பார்த்ததாக விவரிக்கிறார் ரூபர்ட்.
5.55 : சென்டோசா தீவு வந்தடைந்தார் டிரம்ப்

5. 48 : கிம் ஜோங் - உன்னை புகழ்வது வருத்தம் தருகிறது என்கிறார்கள் வட கொரியாவிலிருந்து தப்பி வந்த மக்கள். அவர்கள் பிபிசி செய்தியாளர்கள் ஹீத்தர் சென் மற்றும் மிஞ்சி லீ ஆகியோருடன் தங்கள் வட கொரிய அனுபவங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். வட கொரியாவிலிருந்து தப்பிய ஓவிய கலைஞரான சோய், "வட கொரியாவில் நாங்கள் மிகவும் கொடுமைபடுத்தப்பட்டோம். உலக தலைவர்களுடன் கிம் அணிவகுத்து வருவது என்னை கோபப்படுத்துகிறது." என்கிறார். சோய் வட கொரியாவிலிருந்து 2012 ஆம் ஆண்டு தப்பி தென் கொரியா சென்றார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு, 2
5: 47 : வாகனத்தில் இருந்தப்படியே அதிபர் டிரம்ப் ட்வீட் செய்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 14
5. 45 : வட கொரியா அதிபர் கிம் ஜோங் - உன் தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து உச்சி மாநாடு நடக்கும் இடத்துக்கு கிளம்பினார். அவரது வாகனத்தொடரணி உச்சி மாநாடு நடைபெறும் கேப்பல்லா நட்சத்திர விடுதி நோக்கி புறப்பட்டது.

பட மூலாதாரம், Reuters
5.36 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வாகனத்தொடரணி கேப்பல்லா நட்சத்திர விடுதி நோக்கி புறப்பட்டது.

பட மூலாதாரம், Reuters

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே, அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகுதியில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், தனது சகோதரியான கிம் யோ-ஜாங் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் சிங்கப்பூரை சென்றடைந்தார்.
அதே தினத்தின் பிற்பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சிங்கப்பூர் சென்றடைந்தார். அவர்கள் இருவரையும் சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது.
அணுஆயுதமற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது குறித்த விடயங்களே இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய இடத்தை வகிக்கும் என்று கருதப்படும் நிலையில், கொரிய போரை முறைப்படி முடித்து வைப்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்படும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
டிரம்ப் அறிவித்த இந்த சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறுமா இல்லையா என்பது குறித்த கேள்வி தொடக்கத்திலிருந்தே இருந்து வந்த நிலையில், கடந்த மாத இறுதியில் வட கொரியாவுடன் ஏற்பட்ட வார்த்தை மோதலின் காரணமாக இந்த சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
பிறகு வட கொரிய தூதர் ஒருவரை நேரில் சந்தித்து பேசிய பின்னர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மீண்டும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா - வட கொரியா பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தைகளின் முடிவில் கிம், அணுஆயுதங்களை கைவிட்டு விடுவார் என்று அமெரிக்கா நம்புகிறது.
கடந்த 18 மாதங்களாக அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவியது.

பட மூலாதாரம், Reuters
முன்னதாக, சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்து எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியது. இதனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற ஒரு வருடத்திற்குள், டிரம்பிற்கும், கிம்மிற்கும் இடையே பல கசப்பான பரிமாற்றங்கள் நடைபெற்றன.
அமெரிக்காவை, வட கொரியா தொடர்ந்து அச்சுறுத்தினால், கடும் கோபத்தை கட்டவிழ்த்துவிட வேண்டியிருக்கும் என்று டிரம்ப் உறுதி எடுத்தார். அதற்கு டிரம்பினை, மனநலம் சரியில்லாதவர் என்று கிம் குறிப்பிட்டிருந்தார்.

நிகழ்ச்சி நிரல் என்ன?
டிரம்ப் - கிம் சந்திப்பு குறித்த நிகழ்ச்சி நிரல் குறித்த சில தகவல்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
மதிய உணவிற்கு முன்பு இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்து உரையாடுகிறார்கள்.
பேசுவார்த்தை முடிந்தபின் மாலை நேரத்தில் டிரம்ப் அமெரிக்கா கிளம்புகிறார்.
கிம் அதற்கு முன்னதாகவே உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு புறப்படுவார்.

டிரம்ப் - கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
சிங்கப்பூர் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுடனும் சமூகமா உறவைக்கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பெரும்பாலான நாடுகளில் வடகொரியாவுக்கு தூதரக உறவே இல்லை. வடகொரியா தூதரகம் அமைத்துள்ள மிகச் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
நீண்ட காலமாக சிங்கப்பூர் வழியாக வடகொரியா வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
சிங்கப்பூரில் போராட்டங்களும் பெருமளவில் தடை செய்யப்பட்டுள்ளதால், அது குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை.

டிரம்ப் - கிம் சந்திப்பு குறித்து சிங்கப்பூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
டிரம்ப் - கிம் சந்திப்பில் சிங்கப்பூர் மக்களுக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. அதேநேரம், தங்கள் நாட்டில் இந்த சந்திப்பு நடப்பது குறித்த பெருமிதம் சிங்கப்பூர் மக்களுக்கு இருக்கிறது.

பிபிசியிடம் பேசிய ஒருவர் பெருமிதத்துடன், "சிங்கப்பூர் மதிக்கப்படும்" என்றார்.
ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த கிம் ஜோங் - உன், "இந்த மாநாடு வெற்றி அடைந்தால், அதற்கு சிங்கப்பூரும் ஒரு காரணம்" என்றார்.

டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும் சென்டோசா தீவை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
சிங்கப்பூரை உருவாக்குகின்ற 63 தீவுகளில் சென்டோசாவும் ஒன்று.
500 ஹெக்டேர் பரப்பளவுடைய சென்டோசா தீவு, தீவின் பெருநிலத்தின் குறுகிய தொலைவில்தான் அமைந்துள்ளது. இது ஆடம்பர உல்லாச விடுதிகள், தனியார் கப்பல் தொகுதிகள் மற்றும் ஆடம்பர கோல்ஃப் கிளப்கள் இருக்கின்ற இடமாகும்.
ஆனால், கடற்கொள்ளை, இரத்தம் சிந்தியது மற்றும் போர் பற்றிய இருண்ட வரலாறும் இந்த தீவுக்கு உண்டு.
19ம் நூற்றாண்டு பிரிட்டிஷாரின் வணிக நிலையமாக சிங்கப்பூர் நிறுவப்பட்டது.

பட மூலாதாரம், REUTERS/CAPELLA SINGAPORE
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான கடல்வழிப் பாதையில் சிங்கப்பூரின் முக்கிய இடம் சிறந்ததொரு தேர்வாக அமைந்தது.
பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்னதாகவும், சிங்கப்பூர் வளர்ந்து வந்த வணிக மையமாக திகழ்ந்தது. வணிகர்களும், வர்த்தகர்களும், கடற்கொள்ளையரும் கூட அடிக்கடி சந்திக்கிற இடமாக இது திகழ்ந்தது.
அக்காலத்தில் சென்டோசா தீவு "புலாவ் பிலாகாங் மாதி" என்று அறியப்பட்டது. இதற்கு "இறப்புக்கு பிந்தைய தீவு" என்று பொருள். அதிக கடற்கொள்ளையர் இருந்ததை இந்த பெயர் குறித்து காட்டுகிறது.
மலாய், சீனர் மற்றும் சுலாவெசி என்கிற இந்தோனீஷிய தீவை பூர்வீகமாக கொண்ட மாலுமிகளான புகிஸ் மக்கள் பெரும்பாலும் இந்த தீவில் வாழ்கின்றனர்.

அதிபர் கிம் ஜோங் -உன் குறித்து வட கொரிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
வட கொரியாவில், அதன் தலைவர் கிம் ஜோங் உன் கடவுளின் இடத்தில் இருக்கிறார். அவரை கேள்வி கேட்பது என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று.
"இந்த சிறிய மனிதர் தனது சிந்தனை முழுவதையும் ஒரு ரத்தக் காட்டேரியாக தங்கள் பணத்தை உறிஞ்சுவதற்கு மட்டுமே பயன்படுத்துவதாக மக்கள் நினைக்கிறார்கள்" என்று பிபிசி-யிடம் தெரிவித்தார்.
"எங்கள் வறுமைக்கு காரணம் அமெரிக்காதான். அவர்கள்தான் எங்கள் இருநாட்டையும் (வட மற்றும் தென் கொரியா) பிரித்து, எல்லையை மூடியிருக்கிறார்கள்"
வட கொரியா நாட்டிற்குள் நுழையும் தகவல்கள் அனைத்தும் அந்நாட்டு அரசால் தீவிரமாக கட்டுப்படுத்தப்படுகிறது. அவ்வரசு அமெரிக்காவுக்கு எதிராகவும், அதன் அண்டை நாடான தென் கொரியா குறித்தும் தீவிரமாக பிரசாரம் செய்கிறது.
விரிவாக படிக்க:கிம் ஜோங்-உன் குறித்து வட கொரிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

பாலியல் வல்லுறவு, மாதவிடாய் இல்லாமை: வட கொரிய ராணுவத்தில் பெண்களின் நிலை
`நாங்கள் படுக்கும் படுக்கை, நெல் உமியைக் கொண்டு செய்யப்பட்டது. அவை பருத்தியால் செய்யப்பட்டவை அல்ல. அதனால் எங்கள் உடலிலிருந்து வரும் வேர்வையும் நாற்றமும் அதில் இருக்கும். அது இதமானது இல்லை.`
துணிகளை துவைக்க போதுமான வசதிகளும் இல்லை. அதனால், எங்களினால் படுக்கையை முறையாக துவைக்க முடியும். இதுவும், இந்த நிலை ஏற்பட முக்கிய காரணம்.
`எங்களால் சரியாக அங்கு குளிக்கவும் முடியாது. பெண்களாக இந்த விஷயம் எங்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தது` என்கிறார் சோ இயோன்.

வட கொரியா ஏன் அணு ஆயுதங்களை விரும்புகிறது?
இரண்டாம் உலகப்போருக்கு பின்பு கொரிய தீபகற்பம் இரண்டாக பிரிந்தது. கம்யூனிச நாடான வட கொரியா ஸ்டாலின் உருவாக்கிய சர்வாதிகார அமைப்பை ஏற்றுக்கொண்டு கட்டமைக்கப்பட்டது.
உலக மேடையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தனது நாட்டை அழிக்க நினைக்கும் மற்ற உலக நாடுகளிலிருந்து தன்னை தற்காத்து கொள்வதற்கான ஒரே வழி அணுஆயுதங்கள்தான் என்று அந்நாடு கூறுகிறது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்