"உங்கள் பாஸ்வேர்டை மாற்றுங்கள்" - பயனர்களுக்கு ட்விட்டர் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images
தமது உள் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட சில கோளாறுகள் வெளிப்பட்டதை அடுத்து தங்கள் கடவுச் சொல்லை (பாஸ்வேர்டை) மாற்றும்படி 330 மில்லியன் பயனர்களை ட்விட்டர் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில், யாருடைய பாஸ்வர்டும் திருடப்படவோ அல்லது தவறாக பயன்படுத்தப்படவோ இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
எனினும், ட்விட்டர் பயனர்கள் அனைவரும் 'எச்சரிக்கையுடன்' தங்கள் பாஸ்வர்டை மாற்றுவது நல்லது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
எத்தனை பாஸ்வர்டுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்ற தகவலை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை.
சில வாரங்களுக்கு முன்பு கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்த ட்விட்டர் நிறுவனம், அதை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக அதன் ஊழியர் ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
பிற செய்திகள்:
- இந்தியா முழுவதும் மின்மயமாகி உள்ளதா?
- ''பேயை காட்டினால் ரூ.20 லட்சம்'' - திருச்சபைக்கு ஒரு சவால்
- பாலியல் குற்றச்சாட்டு: ஆஸ்கர் அகாடமியிலிருந்து இரு உறுப்பினர்கள் நீக்கம்
- “அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்ய மரணத்தைத் தழுவவும் தயார்” - சீனப் போராளியின் மனைவி
- பீகாரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் தீயில் கருகி 27 பேர் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












