ஒரு கிராமத்தின் 10% வீடுகளும், அரசு கட்டடங்களும் மின் வசதி பெற்றிருந்தால், அந்த கிராமம் மின்மயமாக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. டிசம்பர் 2018க்குள் இந்தியாவில் அனைத்து வீடுகளுகளுக்கும் மின்வசதி கொடுக்க, 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை 2015-ம் ஆண்டு மோதி தொடங்கினார்.
இத்திட்டத்தை தவிர, 597,464 கிராமங்களுக்கும், 5 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களும் மின் இணைப்பு பெற்றுள்ளன.
இந்தியா சுதந்திரத்திற்கு பின் பல சாதனைகளை செய்துள்ளது.
1947-ம் ஆண்டு
வெறும் 1500 கிராமங்களில் மட்டுமே மின் வசதி இருந்தது.
2005-2014 வரை
1,082,280க்கும் அதிகமான கிராமங்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது.
மே 2018-ல்
கூடுதலாக 18,452 கிராமங்களுக்கு மின் வசதி கொடுக்கப்பட்டு, இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி கிடைத்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் மின் வசதி இருந்தாலும், தூரத்தில் உள்ள வீடுகளை இணைப்பது கடினமானதாக உள்ளது.
மாதாந்திர மின் கட்டணம் செலுத்த முடியாததாலும், அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதாலும், சில குடும்பங்கள் மின் இணைப்பை பெற விரும்பாமலும் இருக்கலாம்.







