உலகப் பார்வை: பெருங்கடலில் பிளாஸ்டிக்கின் அளவு 3 மடங்காக உயரும் அபாயம்: ஆய்வில் தகவல்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
கடலில் 3 மடங்கு பிளாஸ்டிக் அதிகரிக்கும்

பட மூலாதாரம், AFP
குப்பைகளைக் குறைப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த 10 வருடத்தில் பெருங்கடலில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவு 3 மடங்கு அதிகரிக்கும் என பிரிட்டன் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு ஆய்வின் அறிக்கை எச்சரித்துள்ளது
புதினுக்கு வாழ்த்து தெரிவித்ததால் விமர்சிக்கப்பட்ட டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images
ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற விளாடிமிர் புதினை, தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக கூறப்படும் விவகாரத்தில், புதினை எதிர்கொள்வதில் டிரம்ப் தோல்வியடைந்துவிட்டதாக அமெரிக்க நாடாளுமன்றம் விமர்சித்துள்ளது.
போலி செய்திகள்: கூகுள் 300 மில்லியன் டாலர் முதலீடு

பட மூலாதாரம், Getty Images
செய்தி நிறுவனங்கள் போலி செய்திகளுக்கு எதிராகப் போராட உதவுவதற்காக 300 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் கூறுகிறது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தவறான மற்றும் போலியான தகவல்கள் பரவ அனுமதித்ததாக கூகுள்,ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் விமர்சங்களை எதிர்கொண்டதால், இந்த மாற்றங்கள் வந்துள்ளன.
சிரியாவில் 35 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images
டமாஸ்கஸின் கிழக்கு புறநகர் பகுதியில் போராளி குழுவினர் ஏவிய ராக்கெட்டினால், 35 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும், போராளிகள் வசம் உள்ள கிழக்கு கூட்டா நகரத்தில் சமீபத்தில் நடந்த வான் தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. இப்பகுதியில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்
பிற செய்திகள்:
- `மகிழ்ச்சி` - எப்படி எப்போதும் ஃபின்லாந்து மக்களால் மகிழ்வாக இருக்க முடிகிறது?
- அழிந்து வரும் காண்டாமிருகங்கள்: மனிதனின் எதிர்காலத்துக்கு பாதிப்பா? #InternationalDayofForests
- “ரத யாத்திரைக்கு பதிலாக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்”
- “எங்கள் நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சி தோல்வியடையும்” - சீன அதிபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












