இந்தியாவுக்கு 6 அணு உலைகள் விற்க முயலும் பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் நான்கு நாட்கள் அரசுப் பயணமாக நேற்று இரவு இந்தியா வந்துள்ளார். அவரை பிரதமர் நரேந்திர மோதி நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

Emmanuel Macron with Indian Prime minister Narendra Modi

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோதி-மக்ரோங்

மின் தேவை அதிகம் உள்ள இந்தியாவுக்கு பிரான்சில் தயாரிக்கப்பட்ட ஆறு அணு உலைகளை விற்கவும் இந்தப் பயணத்தில் மக்ரோங் முயல்வார் எனத் தெரிகிறது.

இந்தப் பயணத்தின்போது வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் இருநாடுகளிடையிலான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இந்தியாவுக்கு 36 ரஃபேல் ஜெட் போர் விமானங்களை விற்கும் உடன்படிக்கையை இறுதி செய்வதில் பிரான்ஸ் தீவிரமாக உள்ளது.

இந்தியப் பெருங்கடலில் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் செயல்படும், சூரிய வெளிச்சம் அதிகம் உள்ள நாடுகளின் கூட்டமைப்பான 'இன்டர்நேஷனல் சோலார் அலையன்ஸ்' மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை பற்றியும் மோடி-மக்ரோங் இருவரும் விவாதிப்பர்.

இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் தங்கள் நாட்டுக்கு முதன்மையான கூட்டாளி என்று கூறியுள்ளார் மக்ரோங். இந்தியாவுக்கு பிரான்ஸ்தான் ஐரோப்பாவுக்கான நுழைவாயிலாக இருக்கவேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :