உலகப் பார்வை: 'மியான்மரில் பட்டினி கிடக்கும் ரோஹிஞ்சா மக்கள்'
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
மியான்மர்: 'இனச்சுத்திகரிப்பு இன்னும் நிற்கவில்லை'

பட மூலாதாரம், Getty Images
மியான்மரின் ரகைன் மாகாணத்தில் வசிக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்வதை மியான்மர் அரசு இன்னும் நிறுத்தவில்லை என்று மனித உரிமை விவகாரங்களுக்கான ஐ.நா-வின் துணைப் பொதுச் செயலர் ஆன்ரூ கில்மோர் கூறியுள்ளார்.
ரோஹிஞ்சா மக்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உள்ளாவதாகவும், வேறு வழியின்றி பட்டினி கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடகொரியாவை சந்தேகிக்கும் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters
தாங்கள் அச்சுறுத்தப்படாவிட்டால் அணு ஆயுதங்களைக் கைவிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வடகொரியா கூறியிருக்கும் சூழ்நிலையில், "தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே நடக்கும் பேச்சுவார்தைகளைத் தொடர்ந்து வெளிவரும் அறிக்கைகள் நேர்மறையாக இருந்தாலும் அவை பொய்யான நம்பிக்கைகளைத் தரலாம்," என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
திங்களன்று தென்கொரிய அதிகாரிகளை சந்தித்த வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அணு ஆயுதங்களைக் கைவிடுவது குறித்து கூறியிருந்தார்.

அமெரிக்கா: தொடரும் பதவி விலகல்கள்

பட மூலாதாரம், AFP
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் பொறுப்பு வகிப்பவர்கள் பதவி விலகல் தொடர்ந்து வருகிறது. அதிபரின் முக்கிய பொருளாதார ஆலோசகர் கேரி கோன் பதவி விலகுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்களின் இறக்குமதி மீது வரி விதிக்கும் டிரம்பின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பதவி விலகுவதாகக் கூறப்படுகிறது.

பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












