சிரியாவில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: 32 பேர் பலி

சிரியாவில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: 32 பேர் பலி

பட மூலாதாரம், UK MOD

ரஷ்யாவின் ராணுவ விமானம் சிரியாவில் விபத்துக்கு உள்ளானதில் 32 பேர் மரணம் அடைந்தனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இறந்தவர்களில் 26 பேர் பயணிகள், 6 பேர் விமானத்தில் பணிபுரிந்தவர்கள்.

சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவில் உள்ள ஹமேமீம் விமான தளத்தில், ஆன் -26 விமானம் இறங்க முற்பட்டபோது இந்த விபத்து நடந்துள்ளது, என்று அமைச்சர் ரஷ்ய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று கூறி உள்ள ரஷ்யா, தொழில்நுட்ப கோளாறுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று கூறி உள்ளது.

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :