தென் கொரியாவுடன் நட்புறவை கடைபிடிக்க கிம் ஜாங் உன் விருப்பம்

தென் கொரியாவுடன் "தேசிய மறு இணைப்பு என்னும் புதிய வரலாற்றை எழுத விரும்புவதாக" வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக வட கொரியாவின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திங்களன்று தென் கொரிய பிரதிநிதிகளுக்கு இரவு உணவு விருந்து அளித்தார் கிம் ஜாங் உன்.

பட மூலாதாரம், Reuters

திங்களன்று தென் கொரிய பிரதிநிதிகளுக்கு இரவு உணவு விருந்து அளித்தார் கிம் ஜாங் உன்.

2011ஆம் ஆண்டு அவர் பதவியேற்ற பிறகு தென் கொரிய பிரதிநிதிகள் அவரை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

தென் கொரியாவின் பியாங்சேங்கில் கடந்த மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு இரு நாடுகளுக்குமான உறவில் சற்று இணக்கம் காணப்படுகிறது.

பத்து பேர் கொண்ட அந்த பிரதிநிதிகள் குழுவில் தென் கொரியாவின் புலனாய்வுத் துறை தலைவரான சூ ஹூன் மற்றும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சுங் உய்-யோங் ஆகியோரும் அடங்குவர்.

திங்களன்று தென் கொரிய பிரதிநிதிகளுக்கு இரவு உணவு விருந்து அளித்தார் கிம் ஜாங் உன்.

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, தென் மற்றும் வட கொரியா ஆகிய இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள், இருநாட்டு உறவை மேம்படுத்த வேண்டும், மேலும் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்கள் பயன்பாட்டை வட கொரியா கைவிட வேண்டும் என்னும் தென் கொரிய அதிபர் ஜே இன்னின் தீர்மானம் குறித்து பேச போவதாக சந்திப்பிற்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் சுங் உய்-யோங்.

தொடர்புடைய செய்திகள்

கிம் ஜாங் உன் தென் கொரிய பிரதிநிதிகளை "அன்பாக வரவேற்று" அவர்களிடம் "மனம் திறந்து பேசியதாக" வட கொரியாவின் செய்தி முகமை தெரிவித்தது.

இந்த இரண்டு நாள் சுற்றுப் பயணத்தில், வட கொரியாவின் அணு ஆயுத பயன்பாட்டை அழிப்பது குறித்தும் மேலும் அமெரிக்கா மற்றும் வட கொரியாவிற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கவும் தென் கொரிய பிரதிநிதிகள் குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அணு ஆயுதங்களை கைவிட்டால் மட்டுமே வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால் வட கொரியா அந்த யோசனையை நிராகரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :